Naga Chaitanya - Sobhita Dhulipala Marriage: நடிகர் நாக சைதன்யா - சோபிதா திருமணம்.. எப்பொழுது தெரியுமா?!

அண்மையில் நடிகர்கள் நாகசைதன்யா - சோபிதா துலிபாலா திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது திருமணத்துக்கான சடங்குகள் தொடங்கியுள்ளன.

Naga Chaitanya - Sobhita Dhulipala Marriage: நடிகர் நாக சைதன்யா - சோபிதா திருமணம்.. எப்பொழுது தெரியுமா?!
Actor Naga Chaitanya Weds Sobhita Dhulipala (Photo Credit: @iamnagarjuna X)

நவம்பர் 04, ஹைதராபாத் (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து, தெலுங்கு திரையுலகில் நடிக்கச்சென்று பின்னாளில் பிரபல முன்னணி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை (Naga Chaitanya) திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை சமந்தா (Samantha). திருமணம் முடிந்த 3 ஆண்டுகளுக்கு பின், தம்பதிகள் தங்களுக்கு இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ல் புரிவதாகவும் அறிவித்தனர்.

சைதன்யா - சோபிதா தம்பதி திருமணம்:

இதனையடுத்து, தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வந்த நடிகர் நாக சைதன்யா, 3 ஆண்டுகள் திருமணம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்து வந்தார். இதனிடையே, நாக சைதன்யாவும், பிரபல நடிகையும் சோபிதா துளிபலாவும் (Sobhita Dhulipala) திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களின் திருமண நிச்சயம் தனிப்பட்ட முறையில் எளிமையாக நடைபெற்றது. Bigg Boss Tamil Season 8: முதல் ஓபன் நாமினேஷன்; அதிரடி காட்டிய பிக் பாஸ்., வெதும்பிப்போன தர்ஷிகா., முத்துகுமரனின் ஆட்டம் ஆரம்பம்.!

தற்போது இவர்களின் திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், சோபிதா திருமண சடங்குகளில் பங்கேற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில், அநேகமாக 4ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் திருமண தேதியை நாகர்ஜுனாவோ, சோபிதா குடும்பத்தாரோ இதுவரை உறுதி செய்யவில்லை.

(The above story first appeared on LatestLY on Nov 04, 2024 05:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).