Pushpa 2: "புஷ்பாங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்" டிக்​கெட் முன் பதிவில் ‘புஷ்பா 2’ சாதனை!

அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் நாளை உலகளவில் வெளியாக உள்ளது.

Pushpa 2:
Pushpa 2 (Photo Credit: @sonu_0407 X)

டிசம்பர் 04, ஹைதராபாத் (Cinema News): செம்மரக்கடத்தல் தொடர்பான அரசியல், ரவுடியிசம் பின்னணி கொண்ட திரைப்படமாக, கடந்த 2022 டிசம்பர் மாதம் புஷ்பா (Pushpa) திரைப்படம் வெளியானது. சுகுமார் இயக்கத்தில், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா, என் சாமி உட்பட பல பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.200 கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம், பாக்ஸ் ஆபிசில் மட்டும் ரூ.350 கோடியை கடந்து வசூல் செய்தது. Bigg Boss Tamil Season 8: "இது ஒன்னும் உங்க அப்பா வீடு கிடையாது" குழாய் அடி சண்டைப் போடும் தர்ஷிகா, சௌதர்யா..!

நாளை படம் வெளியீடு:

இதனையடுத்து, படத்தின் இரண்டாம் (Pushpa 2) பாகமும் விறுவிறுப்புடன் படமாக்கப்பட்ட நிலையில், பல்வேறு தொழில்நுட்ப பிரச்சனைகளால் வெளியீடு தள்ளிச்சென்று, 05 டிசம்பர் 2024 அன்று படம் வெளியிடுவது உறுதி செய்யப்பட்டது. தெலுங்கு மொழியில் உருவான திரைப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழியிலும் வெளியிடப்படுகிறது. இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் படக்குழு சார்பில் புதிய வழிகளில் முன்னெடுக்கப்பட்டது. இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பே இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விட்டது. இப்படம் டிக்கெட் முன்பதிவில் மட்டும் உலகளவில் சுமார் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புக் ​மை ஷோ இணையதளத்தில் விரைவாக 10 லட்சம் டிக்​கெட்கள் விற்ற முதல் படம் என்ற சாதனையை ‘புஷ்பா 2’ பெற்றுள்ளது.

(The above story first appeared on LatestLY on Dec 04, 2024 06:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).