Ramya Pandian Marriage: யோகா டீச்சரை கரம் பிடிக்கும் ரம்யா பாண்டியன்.. அதுவும் அடுத்த மாதமே திருமணமாம்!!

நடிகை ரம்யா பாண்டியன் தனது நீண்ட நாள் காதலரான யோகா மாஸ்டர் தவானை திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார்.

Ramya Pandian Marriage: யோகா டீச்சரை கரம் பிடிக்கும் ரம்யா பாண்டியன்.. அதுவும் அடுத்த மாதமே திருமணமாம்!!
Ramya Pandian (Photo Credit: Instagram)

அக்டோபர் 18, சென்னை (Cinema News): மொட்டைமாடியில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன் (Ramya Pandian). தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்வின் மூலம் பிரபலமாகி சில படங்களில் நடித்தார். தற்போது சில திரைப்படங்களிலும் விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இருக்கிறார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு இவருக்கு இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. Bigg Boss Tamil Season 8: ஆரம்பித்தது, ‘நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்’.. பிக் பாஸ் எவிக்சனிலிருந்து தப்பிக்கப்போகும் நபர் யார்?!

இந்நிலையில் தான் ரம்யா பாண்டியனுக்கு திருமணம் நடக்கப் போவது தெரிய வந்திருக்கிறது. யோகா மாஸ்டரான லவல் தவானை தான் மணக்கிறார் ரம்யா. திருமணம் இமயமலையில் உள்ள ரிஷிகேஷில் நவம்பர் 8 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், நவம்பர் 15 ஆம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடைபெற திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் ரம்யா பாண்டியன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Oct 18, 2024 04:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).