Shankar and Atlee (Photo Credit: @Rutuu1331 X)

ஜூலை 17, சென்னை (Cinema News): ஆண்டவர் என்றழைக்கப்படும் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன் (Indian). கமல் 2 வேடங்களில் நடித்த இந்த படத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, செந்தில் கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் 28 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான இந்தியன் படத்தின் 2ம் பாகமாக இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீஸானது. படத்தினைப் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து கலவையான விமர்சனங்களைக் கொடுத்தனர். குறிப்பாக படத்தின் நீளம் குறித்து பலபேர் கருத்து தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக 180 நிமிடங்கள் நீளம் கொண்ட ‘இந்தியன் 2’ படத்தில் 11 நிமிடங்கள் 51 வினாடிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. TN Weather Update: நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

சங்கர் பேட்டி: இந்நிலையில் இந்தியன் 2' படத்தினை விளம்பரப்படுத்த அளித்துள்ள பேட்டியில் இயக்குநர் சங்கர், தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அட்லி குறித்து பெருமையாக பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "ஜவான்' படத்திற்காக அட்லி போட்டிருக்கும் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும் அவ்வளவு மெனக்கிட்டு இருக்கிறார். சாதாரணமாக எல்லாம் இந்த வெற்றி வராது, அவ்வளவு உழைப்பு தெரிகிறது. ரொம்ப பிரமாதமாக பண்ணியிருக்க என்று அழைத்து பாராட்டினேன். அவருடைய வெற்றி ரொம்ப சந்தோஷமாக, பெருமையாக இருக்கிறது. என்னுடைய பையன் வெற்றியடைந்தால் எப்படி பெருமையாக இருக்குமோ, அந்தளவுக்கு பெருமையாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார். சங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் தான் அட்லி. அவர் இயக்கத்தில் வெளியான 5 படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றவை.