Parasakthi: சூப்பர் ஸ்டார் வழியில்.. சிவகார்த்திகேயன், ரவி மோகனின் 'பராசக்தி' டைட்டில் டீசர் வெளியீடு.!

சிவகார்த்திகேயன் - சுதா கொங்காரா படத்தின் பெயர் டீசர் வெளியாகியுள்ளது.

Parasakthi: சூப்பர் ஸ்டார் வழியில்.. சிவகார்த்திகேயன், ரவி மோகனின் 'பராசக்தி' டைட்டில் டீசர் வெளியீடு.!
Parasakthi (Photo Credit: YouTube)

ஜனவரி 29, சென்னை (Cinema News): சூரரைப் போற்று வெற்றியை தொடர்ந்து சுதா கொங்கரா சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் புதிய படத்திற்கு பராசக்தி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்க அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ரவி மோகன் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்து வருகின்றார். இந்தப் படம் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு 100வது படம் ஆகும். Karathey Babu: "என்னுடைய பழைய பேர் ஆர்.கே.நகர் மக்கள் கொடுத்தது" அரசியல் பேசும் ரவி மோகனின் 'கராத்தே பாபு' பட அப்டேட்..!

பராசக்தி (Parasakthi):

படம் 1960 கால கட்டத்தில் நடப்பது போன்ற கதைக்களத்தினைக் கொண்டது, கல்லூரி ஒன்றில் நடப்பது போன்ற கதை தான் இந்த படம். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு முன்பு தகவல் வெளியானது போல பராசக்தி என்றே வைக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் ஆகாஷ் பாஸ்கரன் தனது எக்ஸ் பக்கத்தில் சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் புகைப்படத்தினைப் பகிர்ந்துள்ளார். சிவாஜி படக் காட்சி புகைப்படத்தில் ரஜினிகாந்த், பராசக்தி ஹீரோடா.. பேரைக் கேட்டதும் சும்மா அதிருதுல்ல என வசனம் பேசுவார். ஆகாஷ் பாஸ்கரனின் இந்தப் பதிவின் மூலம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர். சிவாஜி கணேசன் நடித்து பட்டித் தொட்டியெங்கும் பிரபலமான பராசக்தி படத்தின் தலைப்பு 73 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

'பராசக்தி' டைட்டில் டீசர் வெளியீடு:

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).