Squid Games Season 2: மரண பயம் காட்டும் விளையாட்டு.. வெளியானது ஸ்க்விட் கேம் 2 டீசர்..!

உலகம் முழுவதும் உள்ள வெப் சீரியஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக தற்போது ஸ்க்விட் கேம்மின் 2ம் பாகத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Squid Games Season 2: மரண பயம் காட்டும் விளையாட்டு.. வெளியானது ஸ்க்விட் கேம் 2 டீசர்..!
Squid Game (Photo Credit: YouTube)

ஆகஸ்ட் 01, தென் கொரியா (Cinema News): கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதித்தில் உலகம் முழுவதும் இந்த வெப் சீரிஸ் ஸ்க்விட் கேம் (Squid Games) வெளியாகி பெரிதளவு வரவேற்கப்பட்டது. இந்த சீரிஸின் கதை, யாருக்கெல்லாம் கடன் இருக்கின்றதோ, அவர்கள் இந்த விளையாட்டில் கலந்து கொண்டு பணத்தை வென்று கடனை அடைத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு பார்த்து ஒரு விளையாட்டு விளையாட செல்கின்றனர். இந்த விளையாட்டின் விதிகளில் இருந்து சிறிய தவறு நடந்தாலும் அவர்களுக்கு தண்டனையாக அவர்கள் உடனே கொல்லப்படுவார்கள். இறுதிவரை எத்தனை பேர் இந்த போட்டியில் தாக்குப் பிடித்தனர் என்பதுதான் கதை. Rashmika Mandanna Helps Kerala: கேரளா மாநில அரசுக்கு ரூ.10 இலட்சம் நிதிஉதவி அளித்த நடிகை ராஷ்மிகா..!

ஸ்க்விட் கேம் 2 டீசர்: இந்நிலையில், இதற்கான 2-ஆம் பாகத்தின் டீசரை வெளியிட்டு அது நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதியையும் அந்த சீரிஸ் குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதம் 26-ம் தேதி ஸ்க்விட் கேம் வெப் சீரியஸின் 2-ஆம் பாகம் உலகம் வெளியாகும். சீசன் 1 முடிவில் பழிவாங்குவதாக சபதம் செய்த சியோங் கி-ஹன் திரும்பி வந்து மீண்டும் கேமில் இணைகிறார். பழிவாங்குவதில் அவர் வெற்றி பெறுவாரா? என்பதை மையமாக கொண்டு இந்த சீரிஸ் வெளியாக உள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 01, 2024 07:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).