Oviya Tattoo: லீக்கான சர்ச்சை வீடியோ.. ஓவியாவின் டாட்டூ புகைப்படங்கள் வைரல்.!
சமீபத்தில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை சந்தித்த நடிகை ஓவியா, தற்போது வரை அதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை எனினும், அவர் அதன் மர்மம் தொடரட்டும் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 17, சென்னை (Cinema News): பிரபல தமிழ் நடிகையான ஓவியா, மலையாளத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமாகி, பின் தமிழில் களவாணி, மூடர்கூடம் உட்பட பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். பிக் பாஸ் முதல் சீசனில் இவர் கலந்துகொண்டு, தமிழக மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றிருந்தார். இதனிடையே, சமீபத்தில் வெளியான ஒரு ஆபாச வீடியோவில், நடிகை இருப்பதாக நெட்டிசன்களால் பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வீடியோ வைரலாக்கப்பட்டது.
கேரளாவில் பிறந்தவர்:
இந்த விஷயம் குறித்து நடிகை ஓவியா எந்த விதமான விளக்கமும் அளிக்காத நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி எழுப்பியோருக்கு தரமான பதிலடி பதிலை வழங்கி இருந்தார். மேலும், அந்த விடீயோவின் மர்மம் தொடரட்டும் எனவும் அவர் கமெண்ட் செய்து இருந்தார். கேரளா மாநிலத்தில் உள்ள திருசூரில், எளிமையான குடும்பத்தில் பிறந்த நடிகை ஓவியா, கடந்த 2007ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து தனது திரைத்துறை பணியை தொடங்கி இருந்தார்.
ட்ரெண்டிங்கில் ஓவியா:
கடந்த 2010ல் நடிகர் விமல் - ஓவியா நடிப்பில் வெளியான களவாணி திரைப்படம், ஓவியாவுக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் பெற்றுத்தந்தது. இதனிடையே தான் அவருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் பொருட்டு, எதோ ஒரு வீடியோவை வெளியிட்டு அதனை நடிகை ஓவியா என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஏஐ தொழில்நுட்பம் உட்பட பல்வேறு பிரச்சனைகளை நடிகைகள் மிகத்தீவிர அளவில் சமீபத்தில் எதிர்கொள்ளத் தொடங்கி இருக்கின்றனர்.
நடிகை ஓவியாவின் கைகளில் இருக்கும் டேட்டூ:
சர்ச்சைக்குரிய வீடியோவை பகிருவதாக பயனர் அறிவித்த ட்விட்:
ட்ரெண்டிங் கேப்சனை பதிவிட்டு, ஓவியாவுக்கு ஆதரவாக இருப்பதாக நபர் வலைப்பதிவு:
கடந்த 24 மணிநேரத்தில் ஓவியாவின் டாட்டூ குறித்த அதிக தேடல் இடம்பெற்றதாக பதிவர் வலைப்பதிவு:
ஓவியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு: