Thalapathy Vijay Watches Vettaiyan: சூப்பர் ஸ்டாரின் 'வேட்டையன்' பார்க்க வந்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.!

சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தை விஜய் பார்த்து ரசித்துள்ளார்.

Thalapathy Vijay Watches Vettaiyan: சூப்பர் ஸ்டாரின் 'வேட்டையன்' பார்க்க வந்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.!
Thalapathy Vijay (Photo Credit: @NewsTamil24X7 X)

அக்டோபர் 10, சென்னை (Cinema News): சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த வேட்டையன் (Vettaiyan) படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மலையாள திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். இவர்களுடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், ஷர்வானந்த், ரமேஷ் திலக், ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். Kalidas Jayaram Marriage: நடிகர் காளிதாஸ் ஜெயராம் திருமணம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் ஜெயராம் குடும்பத்துடன் நேரில் அழைப்பு..!

வேட்டையன் படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. இதையொட்டி தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் ஆடிப்பாடி, பட்டாசு வெடித்தும் தியேட்டர் முன் கொண்டாடி மகிழ்ந்தனர். முதல் காட்சி முடிந்தவுடன் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் தமிழ் திரை உலக சேர்ந்த பல பிரபலங்கள் இன்று திரையரங்குகளில் சென்று ’வேட்டையன்’ படத்தை பார்த்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தை விஜய் (Thalapathy Vijay) பார்த்துவிட்டு அவர் வெளியே வந்து காரில் ஏறும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டாரின் 'வேட்டையன்' பார்க்க வந்த தளபதி விஜய்:

(The above story first appeared on LatestLY on Oct 10, 2024 03:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).