Genie First Look: அற்புத விளக்கில் இருந்து வரும் ஜெயம் ரவி.. ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!
ஜெயம் ரவி நடித்து வரும் ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 25, சென்னை (Cinema News): ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மாஸ் என்ட்ரி கொடுத்த ரவி, தனது அருமையான நடிப்பால் ஜெயம் ரவியாக (Jayam Ravi) உருவெடுத்தார். தொடர்ந்து தன் அண்ணனுடன் பல்வேறு படங்களில் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தார். கடந்த ஆண்டு வெளியான பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வனில், பொன்னியின் செல்வனாக நடித்து அனைவரின் மனதையும் வென்றார். ஆனால் அதன் பின் வெளியான படம் எதுவும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.
சொல்லப்போனால் நீண்ட காலமாக வெற்றி படத்தை கொடுக்காமல் உள்ளார். பூமி படத்தில் ஆரம்பித்த தோல்வி இறைவன், அகிலன், சைரன் என்று அவரை படுத்தி எடுத்து வருகிறது. பொன்னியின் செல்வன் என்னதான் வெற்றி படமாக இருந்தாலும், அதில் பல நடிகர்கள் நடித்ததினால், அவரின் தனிப்பட வெற்றியாக அது பார்க்கப்படுவதில்லை. IPL 2024 MI and Gujarat Fans Fight: மைதானத்தை கலவரப்படுத்திய ரசிகர்கள்; மும்பை - குஜராத் அணி ஐபிஎல் ஆட்டத்தில் அடிதடி.!
ஜீனி: இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஜீனி (Genie). அர்ஜூனன் ஜூனியர் இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷினி மற்றும் வமிகா கப்பி உள்ளிட்ட நடிகைகள் நடிக்கிறார்கள். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (First Look) வெளியாகியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Mar 25, 2024 10:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

