Vijay's 'GOAT' To Have An IMAX Release: ஐமேக்ஸில் பிரம்மாண்டமாக வெளிவரும் தளபதியின் கோட்.. துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்..!
விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 09, சென்னை (Cinema News): நடிகர் விஜய் (Thalapathy Vijay) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Greatest of All Time) படம் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்றது. மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Kalki Beats Jawan: ஜவானின் வசூலை அடித்து தூக்கிய கல்கி.. நீண்ட நாள் பிறகு ருத்ரதாண்டவம் ஆடிய பிரபாஸ்..!
தி கோட்: படத்தில் விஜய் முன்று பாடல்கள் பாடியுள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியானது. இந்த இரண்டு பாடல்களிலும் விஜய் பாடியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் தி கோட் படத்தை ஐமேக்ஸ் திரையிலும் (IMAX format) வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Experience #TheGreatestOfAllTime in IMAX from Sept 5th 🔥 #TheGOATinIMAX pic.twitter.com/BsClErcmdY
— IMAX (@IMAX) August 8, 2024
(The above story first appeared on LatestLY on Aug 09, 2024 11:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

