Whistle Podu From The GOAT: "குடிமக்கதான் நம் கூட்டணி.. பார்ட்டி விட்டு தான் போ மாட்ட நீ.." தளபதி விஜய் குரலில் வெளியான விசில் போடு..!

'கோட்' படத்தின் முதல் பாடலான `விசில் போடு' தளபதி விஜய் குரலில் வெளியானது.

Whistle Podu From The GOAT:
Whistle Podu (Photo Credit: YouTube)

ஏப்ரல் 15, சென்னை (Cinema News): நடிகர் விஜய் (Thalapathy Vijay) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Greatest of All Time) படம் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்றது. மேலும் அடுத்தகட்ட படப்பிடிப்பானது துபாயில் நடைபெற உள்ளது. 1,11,111 Laddu to Ayodhya Ram Temple: அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலுக்கு செல்லும் 1,11,111 கிலோ லட்டுகள்; ராம நவமியை முன்னிட்டு பிரசாதங்கள் அனுப்பி வைப்பு.!

மேலும் ரமலான் கொண்டாட்டத்தை முன்னிட்டு, நடிகர் விஜய் கோட் (GOAT) படத்தின் சூப்பரான அப்டேட்டை வெளியிட்டு இருந்தார். அதன்படி, இப்படமானது உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி உள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், விஜய் குரலில் வெளியான இப்பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

(The above story first appeared on LatestLY on Apr 15, 2024 10:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).