Kanguva Trimmed: தொடர்ந்த எதிர்மறை விமர்சனங்கள்.. படத்திலிருந்து 12 நிமிட காட்சிகளை நீக்கிய கங்குவா டீம்..!
எதிர்மறை விமர்சனங்கள் எதிரொலியாக ‘கங்குவா’ படத்திலிருந்து 12 நிமிட காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் 19, மும்பை (Cinema News): சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, பாபி டியோல், திஷா பதானி, நடராஜன், ஜெகபதி பாபு, யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா (Kanguva). ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் படம் உருவாகியுள்ளது. ஐமேக்ஸ் தரத்தில், ரூ.300 கோடி செலவில் உருவான கங்குவா, நவம்பர் 14, 2024 அன்று உலகளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்கள்:
இப்படம் வெளியாகி 2 நாட்களில் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. படத்தின் வெளியீடுக்கு முன்பு படம் நெருப்பாக இருக்கும், பான் இந்திய அளவில் வாயை பிளந்து பார்ப்பார்கள் என சூர்யாவும், ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும், ஒளிப்பதிவு மிகப்பெரிய வெற்றியை அடையும் என வெற்றி பழனிசாமியும் பேசி இருந்தனர். இதனிடையே, படம் வெளியானதும் கலவையான விமர்சனங்கள் வெளியாகி படக்குழுவிற்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. RAKKAYIE Title Teaser Released: "விழிகளில் தீயாய் வாளேந்தி" - வெளியானது நயன்தாராவின் ராக்காயி பட டீசர்.. மிரளவைக்கும் காட்சிகள்..!
12 நிமிட காட்சிகள் நீக்கம்:
படத்தில் இடம்பெற்ற காட்சிகளில் இசை ரீதியாக பெரும் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதிக இரைச்சல் சத்தத்தால் பார்த்தவர்களுக்கு தலைவலி உண்டாக, அவர்கள் திரைப்படம் பார்க்க வந்து தலைவலி ஏற்பட்ட கடுப்பில் மொத்த படத்தையும், தயாரிப்புக்குழுவையும் கடுமையாக வசைபாடிச் சென்றனர். இந்நிலையில், கங்குவா திரைப்படத்தில் இருந்து தேவையில்லாத 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு இருப்பதாக திரையரங்க தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் பெரும்பாலும் அதிகமாக விமர்சிக்கப்பட்ட படத்தின் ஆரம்பக் காட்சிகளே நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on Nov 19, 2024 11:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

