Kanguva Teaser: "அலறவிடும் காட்சிகள்" சூர்யாவின் கங்குவா படத்தின் அட்டகாசமான டீசர் காட்சிகள் இதோ..!

சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படம் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

Kanguva Teaser:
Ganguva (Photo Credit: YouTube)

மார்ச் 19, சென்னை (Cinema News): ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன்ஸ் (Studio Greens), வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உபளபதியின் யுவி கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா (Kanguva). ரூ.350 கோடி செலவில், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில், வெற்றி பழனிச்சாமியின் ஒளிப்பதிவில், நிஷாந்த் யூசுப்பின் எடிட்டிங்கில், சிறுத்தை சிவா இயக்கத்தில் படம் தயாராகி இருக்கிறது.

படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சூர்யா, பாபி டியோல், திஷா பதானி, நடராஜன் சுப்பிரமணியம், ஜகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், கோவை சரளா, மாரிமுத்து, தீபா, வெங்கட் ரவி, ராகவேந்திரா, பி.எஸ் அவினாஷ், கே.எஸ் ரவிக்குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

சென்னை, கொடைக்கானல், பாண்டிச்சேரி, கோவா, பேங்காங், ஸ்ரீலங்கா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்புகள் விறுவிறுப்புடன் நடைபெற்று, தற்போது வெளியீடுக்கு தயாராகி வருகிறது. இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு பின் விரைவில் திரையில் தமிழ், கன்னடம், ஹிந்தி உட்பட 38 மொழிகளில் உலகளவில் ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகிறது.

படம் வெளியீடுக்கு முன்பே ரூ.500 கோடி அளவிலான வருமானத்தை பெற்றுள்ளது. இதனிடையே, நேற்று பட குழு சார்பில் கங்குவா படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தின் டீசர் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. மிரட்டலான காட்சிகளில் தோன்றியுள்ள நடிகர் சூர்யா முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு தோற்றத்தில் ரசிகர்கள் முன் காட்சியளித்துள்ளார்.

 

(The above story first appeared on LatestLY on Mar 19, 2024 06:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).