Vidaamuyarchi Second Look: முயற்சிகள் தோற்பதில்லை.. தல அஜித்தின் விடாமுயற்சி செகண்ட் லுக் வெளியீடு..!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியிருக்கிறது.

Vidaamuyarchi Second Look: முயற்சிகள் தோற்பதில்லை.. தல அஜித்தின் விடாமுயற்சி செகண்ட் லுக் வெளியீடு..!
Vidaa Muyarchi (Photo Credit: @LycaProductions X)

ஜூலை 08, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் (AjithKumar), மகிழ் திருமேனி (Magizh Thirumeni) இயக்கத்தில் விடாமுயற்சி (Vidaa Muyarchi) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

குட் பேட் அக்லி: இந்த படத்திற்கு பின், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் இணைந்துள்ளார். இதன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன், படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தின் செகண்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது. மேலும், இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Israeli Air Strike On Gaza School: காசா பள்ளியை குறிவைத்த இஸ்ரேலின் தாக்குதல்.. 16 பேர் பரிதாபமாக மரணம்..!

விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்: இதற்கிடையே விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு கடந்த வாரம் வெளியிட்டது. அதில் ஆள் அரவமற்ற ஒரு நெடுஞ்சாலையில் அஜித் கையில் ஒரு டிராவல் பேக் உடன் நடந்து வருவார். குறிப்பாக அஜித் அந்த போஸ்டரில் ஸ்லிம்மாக செம ஸ்டைலாக இருந்தார்.

செகண்ட் லுக்: தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், ‘விடாமுயற்சி’ படத்தின் செகண்ட் லுக் (Second Look) போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘முயற்சிகள் தோற்பதில்லை’ என்ற கேப்ஷனுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவற்றில் ஒரு போஸ்டரில் அஜித் காரை ஓட்டியபடியும், இன்னொரு போஸ்டரில் கையில் துப்பாக்கியுடனும் இருக்கிறார்.

(The above story first appeared on LatestLY on Jul 08, 2024 11:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).