Thalaivar 171 Title Reveal Update: ரஜினியை செதுக்கிய கமல் ஃபேன் பாய்... தலைவர் 171 படத்தின் டைட்டில் டீஸர்..!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 171' படத்தின் டைட்டில் டீஸர் இன்று வெளியாகிறது.
ஏப்ரல் 22, சென்னை (Cinema News): ரஜினிகாந்த் (Rajinikanth) தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. கண்டிப்பாக சோஷியல் மெசேஜுடன் படம் உருவாகும் என்று ரஜினியின் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை முடித்துவிட்டு ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார். Cancer Treatment: நல்லா தூங்குனாலே போதுமா?.. புற்றுநோயை விரட்டி அடிக்க..!
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும் இந்த படத்தின் டைட்டில் டீஸர் இன்று வெளியாக உள்ளது.
The wait is almost over! #Thalaivar171TitleReveal Teaser releasing today at 6PM 😍@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @anbariv#Thalaivar171 pic.twitter.com/A6RMOzUP90
— Sun Pictures (@sunpictures) April 22, 2024
(The above story first appeared on LatestLY on Apr 22, 2024 12:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

