Joker Folie a Deux Trailer Out: ஜோக்கர் என்ற ராட்சசனுக்குள் மலர்ந்த காதல்.. ஜோக்கர் படத்தின் ட்ரைலர் வெளியீடு..!

ஜோக்கர் 2 திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Joker Folie a Deux Trailer Out: ஜோக்கர் என்ற ராட்சசனுக்குள் மலர்ந்த காதல்.. ஜோக்கர் படத்தின் ட்ரைலர் வெளியீடு..!
Joker (Photo Credit: Instagram)

ஜூலை 25, கலிபோர்னியா (Cinema News): பேட்மேன் படத்தில் வில்லனாக வந்தாலும் அனைவரின் மனதையும் கவர்ந்த கதாப்பாத்திரம் தான் ஜோக்கர். இந்த கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜோக்கர்'. அப்படத்தில் ஹாக்கின் ஃபீனிக்ஸ் (Joaquin Phoenix) இப்படத்தில் ஜோக்கராக நடித்திருந்தார். சமூகத்தால் ஒதுக்கப்படும் ஒருவர் அதற்குப் பதிலாக வன்முறையைக் கையில் எடுக்கும் விதமாக இந்த படம் வந்ததாலேயே, அனைவரும் இப்படத்தினைக் கொண்டாடினர். Ajith Kumar Joins Yash’s KGF 3?: "சலாம் ராக்கி பாய்" கே.ஜி.எஃப் டைரக்டர் பிரசாந்த் நீலுடன் இணையும் அஜித்.. உருவாகும் கேஜிஎஃப் யூனிவெர்ஸ்..!

ஜோக்கர் 2: தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் மற்றும் டிசி காமிக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இபடத்திற்கு ' ஜோக்கர்: ஃபாலி அ டியூக்ஸ்' (Joker: Folie à Deux) என தலைப்பிடப்பட்டுள்ளது. தற்போது படத்தின் முதல் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லரில், ஜோக்கர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனநல பிரச்னைக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக ஹார்லி குவின் இடம்பெற்றுள்ளார். இவர்கள் இருவர் இடையே காதல் மலர்வது போன்ற காட்சிகள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. ஜோக்கர் 2 திரைப்படம் அக்டோபர் 4ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jul 25, 2024 03:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).