Kalki 2898 AD Trailer: பாகுபலி பிரபாஸுடன் இணைந்த ஆண்டவரின் கல்கி.. பட்டைய கிளப்பும் ட்ரைலர்..!
பிரபாஸ், கமல்ஹாசன் இணைந்து நடித்துள்ள கல்கி 2898 படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜூன் 11, சென்னை (Cinema News): இயக்குநர் ராஜமெளலி (SS Rajamouli) இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாகுபலி’ (Baahubali). பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, ராணா, நாசர் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்திருந்த இத்திரைப்படம் இந்திய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை ஈட்டியது. இந்த படம் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். மேலும் இந்த படம் அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் என்பது மட்டுமல்ல உலக அளவில் அதிக வசூலை குவித்த படமும் ஆகும். இந்த படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறியவர் தான் பிரபாஸ் (Prabhas).
கல்கி 2898 ஏடி: தற்போது ஒட்டுமொத்த பிரபாஸ் ரசிகர்களின் கவனமும் இந்தப் படத்தில் குவிந்துள்ளது. தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தில் நடித்திருப்பது ஒரு கவனத்தை ஈர்க்கக் கூடிய அம்சமாக இருந்து வருகிறது. மேலும் தீபிகா படுகோனே, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், பசுபதி, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சுமார் 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. TN Weather Report: தமிழகத்தின் வானிலை நிலவரம்.. அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு.. மீனவர்களுக்கான எச்சரிக்கை..!
கல்கி ட்ரைலர்: கல்கி திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் நிலையில், முதல் பாகம் இந்த மாதம் 27ம் தேதி ரிலீஸாகிறது. அதன்படி, கல்கி 2898 ஏடி (Kalki 2898 AD) படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரமாண்டமான செட், கிராஃபிக்ஸுடன் காட்சிகள், நடிகர்களுக்கான உடைகள், வித்தியாசமான வாகனங்கள், இறுதியில் வரும் கமல்ஹாசனின் தோற்றம் என அனைத்தும் இந்த திரைப்படத்தின் மீது உள்ள ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Jun 11, 2024 04:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

