Vettaiyan Song: "இவன் ஒருத்தன தான் கொண்டாடவே சமுதாயம் சேருதே" வேட்டையன் படத்தின் மாஸான பாடல்!

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் ஹன்டர் வன்டார் பாருடா பாடல் வெளியாகியுள்ளது.

Vettaiyan (Photo Credit: YouTube)

செப்டம்பர் 20, சென்னை (Cinema News): ரஜினிகாந்த் (Rajinikanth) தற்போது வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். இவர்களுடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், ஷர்வானந்த், ரமேஷ் திலக், ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கண்டிப்பாக சோஷியல் மெசேஜுடன் படம் உருவாகும் என்று ரஜினியின் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. Actor Vimal Speech: "கைகொடுத்தாலும் யாருக்குக் கொடுக்கணும். யாருக்கு கை கொடுக்கக்கூடாதுன்னு தெரிஞ்சு கைகொடுக்கணும்" - நடிகர் விமல்..!

இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக 2ஆவது பாடல் ஹன்டர் வன்டார் பாருடா (Hunter Vantaar) பாடல் வெளியாகியுள்ளது. மேலும் அனிருத் இசையில் வேட்டையன் பட பாடல்கள் அத்தனையும் தாறுமாறாக வந்திருப்பதாக கூறுகின்றனர். பின்னணி இசையிலும் சூப்பர் ஸ்டாருக்கு அவர் தரமான சம்பவம் செய்திருக்கிறாராம்.

வேட்டையன் படத்தின் மாஸான பாடல்:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement