Dhruva Natchathiram TrailBLAZEr: துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் சியான் ரசிகர்கள்.!

கெளதம் வாசுதேவ் மேனனின் கனவுதிரைப்படம் நவம்பர் 24ல் நனவாகிறது. விக்ரம் ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்த அட்டகாசமான திரைப்படம் விரைவில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Dhruva Natchathiram TrailBLAZEr: துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் சியான் ரசிகர்கள்.!
Dhruva Natchathiram TrailBLAZEr (Photo Credit: YouTube)

செப்டம்பர் 23, சென்னை (Cinema News): ஒன்றாக என்டர்டைன்மெண்ட் (Ondraga Entertainment) நிறுவனம் தயாரிப்பில், கெளதம் வாசுதேவ் மேனன் (Gautham Vasudev Menon) இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் (Harris Jayaraj) இசையில், சியான் விக்ரம் (Chiyaan Vikram) நடிப்பில் அட்டகாசமாக உருவாகியுள்ள அதிரடி திரைப்படம் துருவ நட்சத்திரம்: சாப்டர் 01 - யுத்த காண்டம் (Dhruva Natchathiram: Chapter One – Yuddha Kaandam).

இந்த படத்தில் சியான் விக்ரம், ரித்து வர்மா, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்ய தர்ஷினி, முன்னா சைமன், வம்சி கிருஷ்ணா, சலீம் பைக், சதிஷ் கிருஷ்ணன், மாய கிருஷ்ணன் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ஆண்டனி படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். தாமரை, பால் தப்பா பாடல் வரிகளை எழுதியுள்ளனர். குமார் தங்கப்பன் கலை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். எண்ணிக் பென் சண்டை காட்சிகளை திறம்பட கையாண்டுள்ளார். படத்தின் இசை வெளியீடு உரிமைகளை சோனி நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. Minor Girl Kidnap Attempt: அதிகாலையில் 4 பேர் கும்பலால் சிறுமி கடத்தல் முயற்சி; பதைபதைக்க வைக்கும் சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ..! 

சியான் விக்ரம் ரசிகர்களால் பெருமளவு எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் முக்கியமானதாக துருவ நட்சத்திரம் இருக்கிறது. ஏனெனில் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 24 நவம்பர் 2023 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கௌதவ் வாசுதேவ் மேனனின் கனவுபடமாக கருதப்படும் துருவ நட்சத்திரம், கடந்த 2013ம் ஆண்டு முதலாக பல பரபரப்பை உண்டாக்கி இருந்தது. ஆனால், 2017க்கு பின் இறுதியாகி படப்பிடப்பிப்புகள் தொடங்கி, கிட்டத்தட்ட 5 ஆண்டு தொடர் உழைப்புக்கு பின் படம் திரையரங்குக்கு வெளியாக தயாராகி இருக்கிறது.

(The above story first appeared on LatestLY on Sep 23, 2023 01:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).