Director Ashwini Dhir's Son Dies: பிரபல இயக்குனரின் 18 வயது மகன் விபத்தில் சிக்கி பலி; கண்ணீரில் குடும்பத்தினர்..!
மும்பையில் இயக்குனர் அஷ்வினி திர் என்பவரின் 18 வயது மகன் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 27, மும்பை (Cinema News): பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் அஷ்வினி திர் என்பவரின் மகன் ஜலஜ் திர் (வயது 18), மும்பையில் ஒரு பெரிய கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த நவம்பர் 23-ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் ஜலஜ் திர் தனது 3 நண்பர்களுடன் காரில் சென்றார். பாந்த்ராவில் மது அருந்திவிட்டு, அதிகாலை 4 மணியளவில் கோரேகான் நோக்கிச் சென்றனர். சஹாரா நட்சத்திர ஹோட்டலுக்கு அருகில் உள்ள வைல் பார்லே நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் அருகே இருந்த டிவைடரில் மோதியது. Squid Game Season 2 Trailer: "ஜெயிச்சா கண்டம்.. தோற்றா தண்டம்.." ஸ்குவிட் கேம் சீசன் 2: அசத்தல் ட்ரைலர் உள்ளே.. உலகளவில் டிசம்பர் 26ல் வெளியீடு.!
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சாஹல் மற்றும் ஜிம்மி ஆகிய இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், சர்தக் மற்றும் ஜலஜ் திர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், ஜலஜ் திர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அஷ்வினி திர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Nov 27, 2024 12:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

