Jawan Collection Worldwide: ரூ.907 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை செய்துள்ள அட்லீயின் ஜவான் திரைப்படம்..!
ஜவான் திரைப்படம் வெளியாகி 13 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், ரூ.900 கோடியை கடந்து வசூல் சாதனை செய்து வருகிறது.
செப்டம்பர் 20, மும்பை (Cinema News): அட்லி குமார் இயக்கத்தில், நடிகர்கள் ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு, சஞ்சய் மல்கோத்ரா உட்பட பலர் நடித்து கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி உலக அளவில் வெளியான திரைப்படம் ஜவான் (Jawan).
ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியான ஜவான் திரைப்படம், ரூபாய் 300 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது. இந்த படம் வெளியீடுக்குப் பின்பு நல்ல வரவேற்பு பெற்று, தற்போது வரை 900 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்திருக்கிறது. Age Limit For Cigarettes: சிகிரெட் வாங்க வயது வரம்பு உயர்வு- குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகமாகிறது சட்டம்.!
விரைவில் ஆயிரம் கோடி என்ற சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் உட்பட பல ஹிட் படங்களை கொடுத்த அட்லி, ஹிந்தியில் தன்னை எப்படி நிரூபிக்க போகிறார்? என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
அதற்கு பதிலாக தனது படத்தின் வசூல், வரவேற்பு ஆகியவற்றை கொடுத்து பலரின் வாயை அடைந்துள்ளார். படத்தின் வசூல் பட தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதால், பாலிவுட் திரையுலகம் மட்டுமல்லாது இந்திய திரை உலகிற்கு ஷாருக்கான் எப்போதும் ஜாம்பவான் தான் என்பதையும் நிரூபித்திருக்கிறார்.
ஜவான் திரைப்படம் தற்போது வரையில் அதிகாரபூர்வமாக ரூ.907.45 கோடி வசூல் செய்துள்ளது. ஷாருக்கானின் பதான் திரைப்படம் ரூ.800 கோடியே வெளியான 13 நாட்களில் வசூல் செய்திருந்த நிலையில், ஜவான் திரைப்படம் அதனையும் விஞ்சியுள்ளது.
And this is how the King ruled the box office!🔥
Book your tickets now!https://t.co/B5xelUahHO
Watch #Jawan in cinemas - in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/n3fngNn1OQ
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) September 20, 2023
(The above story first appeared on LatestLY on Sep 20, 2023 09:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

