Aranmanai 4: பொங்கலுக்கு அட்டகாசமாக களமிறங்குகிறது சுந்தர் சி-யின் அரண்மனை 4: பேய் விருந்துக்கு தயாராகுங்கள்.!

பேய் கதைகளை வைத்து 2 பாகங்கள் அடுத்தடுத்து ஹிட் கொடுத்த சுந்தர் சி, மூன்றாம் பாகத்தின் எதிர்மறையான விமர்சனத்திற்கு பின்னர் நான்காம் பாகத்திற்கான முயற்சியில் களமிறங்கியுள்ளார். ஜனவரி 2024 பொங்கல் பண்டிகையின்போது அரண்மனை 4 வெளியாகிறது.

Aranmanai 4: பொங்கலுக்கு அட்டகாசமாக களமிறங்குகிறது சுந்தர் சி-யின் அரண்மனை 4: பேய் விருந்துக்கு தயாராகுங்கள்.!
Aranmanai 4 Firstlook (Photo Credit: Twitter)

செப்டம்பர் 29, சென்னை (Cinema News): இயக்குனர் சுந்தர் சியின் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் அரண்மனை. பேய் கதையை அடிப்படையாக கொண்டு வெளியான அரண்மனை திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் படம் வசூல், வரவேற்பு ரீதியாக நல்ல வெற்றியை அடைந்தது.

இதனால் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அரண்மனை 2 மற்றும் 3ம் பாகங்கள் வெளியாகின. முதல் இரண்டு பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு, மூன்றாம் பாகத்தில் கேள்விக்குறியானது. Govt Raises Interest Rate on Recurring Deposit: 5 ஆண்டு வைப்புத்தொகை வட்டி விகிதம் 6.7 ஆக உயர்வு - அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு..! 

முதல் இரண்டு பாகங்களில் படத்தின் நகைச்சுவை கதாபாத்திரங்கள் மற்றும் பாடல்கள் பெரிய வெற்றி கிடைக்க வழிவகை செய்தது. ஆனால், மூன்றாம் பாகத்தில் அவை மக்களுக்கு கேள்விக்குறியை ஏற்படுத்தின. இதற்கிடையில், தற்போது அரண்மனை 4ம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில், நடிகர்கள் சுந்தர் சி, தமன்னா, ராசிகன்னா, குஷ்பூ சுந்தர், யோகி பாபு, விடிவி கணேஷ், கோவை சரளா, டெல்லி கணேஷ், சிங்கம்புலி, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலரும் படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹிப்ஹாப் தமிழா படத்தில் இசையமைக்கிறார். படம் பொங்கல் 2024 திருவிழாவில் கலந்துகொள்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

(The above story first appeared on LatestLY on Sep 29, 2023 07:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).