Young Model Killed: 23 வயது இளம் மாடல் அழகி சுட்டுக்கொலை; நண்பரின் கண்முன் துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!

போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனுடன் நெருங்கிய நட்புறவில் இருந்து வந்த மாடல் அழகி, அவரின் நண்பர் கண்முன் போட்டுத்தள்ளப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Young Model Killed: 23 வயது இளம் மாடல் அழகி சுட்டுக்கொலை; நண்பரின் கண்முன் துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!
Landy Parraga Goyburo (Photo Credit: @porktendenciaec X)

மே 05, ஈக்வடார் (Cinema News): பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஈக்வடார் நாட்டின், குயஸ் மாகாணம், யூவெடோ நகரில் இருக்கும் ஷாப்பிங் சென்டரில் ஒன்றில், ஏப்ரல் 29ம் தேதி பெண் ஒருவர் மர்ம கும்பல் ஒன்றால் திடீரென துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையை அரங்கேற்றிய கும்பல் அங்கிருந்து அடுத்த கணமே தப்பிச்சென்றது. தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ASI Killed: மணல் கொள்ளையை தடுத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் டிராக்டர் ஏற்றிப்படுகொலை; நெஞ்சை பதறவைக்கும் துயரம்.! 

போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனுடன் நட்புறவு: விசாரணையில், உயிரிழந்த பெண்மணி லாண்டி பராகா (Landy Párraga Goyburo) கோயபரோ (வயது 23) என்பது தெரியவந்தது. அவர் இளம் மாடல் அழகியாகவும், முன்னாள் ஈக்வடார் நாட்டின் அழகிப்போட்டிக்கு தேர்வான வேட்பாளராகவும் இருந்துள்ளார். மேலும், உள்ளூரில் குற்றவழக்கு பின்னணி இல்லாத லாண்டி, போதைப்பொருள் கடத்தலில் ஆதிக்கம் செலுத்தி வந்த லியான்ரோ நோரிரோ என்ற எல் பட்ரான் என்பவருடன் இணக்கமான நட்புறவில் இருந்து வந்துள்ளார். ASI Killed: மணல் கொள்ளையை தடுத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் டிராக்டர் ஏற்றிப்படுகொலை; நெஞ்சை பதறவைக்கும் துயரம்.!

மாடல் அழகி சுட்டுக்கொலை: லியான்ரோ கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் போதைப்பொருள் கடத்தல் கும்பலிடையே நடந்த தகராறு ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் வழக்கறிஞர் மற்றும் லாண்டி ஆகியோர், அதுதொடர்பான சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் வழக்கு தொடர்பான விவகாரத்தில் லாண்டி கும்பல் ஒன்றால், அவரின் நண்பர் கண்முன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

தற்போது மாடல் அழகி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட கேமிரா காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

(The above story first appeared on LatestLY on May 05, 2024 12:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).