Malaika Arora Father Dies: ஹிந்தி நடிகை மலைக்கா அரோராவின் தந்தை தற்கொலை; கண்ணீர் சோகத்தில் குடும்பம்.!
குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நடிகையின் வீட்டில், துயர சம்பவம் ஒன்று நடந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
செப்டம்பர் 11, மும்பை (Cinema News): விஜெ, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், திரைப்பட நடிகை என பன்முகத்தன்மை கொண்ட ஹிந்தி நடிகை மலைக்கா அரோரா (Malaika Arora). கடந்த 1997 முதல் திரைத்துறையில் பன்முகத்தை கொண்ட நடிகையாக விளங்கி வரும் அரோரா, மும்பையில் இருக்கும் தனது வீட்டில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு 19 ஆண்டுகால கணவர் அர்பாஸ் கானுக்கு (Arbaaz Khan) விவாகரத்து வழங்கிய நடிகை, தற்போது அர்ஜுன் கபூருடன் வசித்து வருகிறார். Aarthi Ravi: ஜெயம் ரவியின் விவாகரத்து அறிவிப்புக்கு, ஆர்த்தி எதிர்ப்பு; பரபரப்பு குற்றச்சாட்டு.!
நடிகையின் தந்தை தற்கொலை:
நடிகை மலைக்கா அரோராவின் பெற்றோர் அனில் அரோரா (Anil Arora) - ஜொய்ஸ் பொலிஸாரப். அணில் பஞ்சாபை சேர்ந்தவர், ஜோயோஸ் மலையாள குடும்பத்தை சேர்ந்த சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, நடிகை மலைக்கா அரோராவின் தந்தை, இன்று காலை தனது குடியிருப்பில், வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
காவல்துறை விசாரணை:
இந்த விஷயம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த மும்பை காவல்துறையினர், அனில் அரோராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணில் அரோராவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
மும்பை காவல்துறையினர் தற்கொலை குறித்து விசாரிக்க முகாமிட்டுள்ள காணொளி:
#WATCH | Maharashtra | Anil Arora, father of actress-model Malaika Arora died by suicide by jumping off the terrace of their residence in Mumbai. Police team is present at the spot and is carrying out investigation. Details awaited. pic.twitter.com/QKBDKWOsdI
— ANI (@ANI) September 11, 2024
(The above story first appeared on LatestLY on Sep 11, 2024 01:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

