Music Composer Vijay Anand Passes Away: பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்.

Music Composer Vijay Anand Passes Away: பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
Vijay Anand (Photo Credit: @backiya28 X)

பிப்ரவரி 07, சென்னை (Chennai): பிரபல திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் (வயது 71), ரஜினியின் "நான் அடிமை இல்லை, நாணயம் இல்லாத நாணயம், ஊருக்கு உபதேசம், காவலன் அவன் கோவலன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். குறிப்பாக நான் அடிமை படத்தில் ‘ஒரு ஜீவன் தான், உன் பாடல் தான்...’ பாடல் மூலம், ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். Spam Call: இனி ஸ்பேம் கால் தொல்லை இல்லை.. தொலைபேசி நிறுவனங்களுக்கு ரூ.110 கோடி அபராதம்..!

இளையராஜா இருந்த காலத்தில் விஜய் ஆனந்த் (Vijay Anand) கன்னடப் பட உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்தார். மேலும் கன்னடத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் விஜய் ஆனந்த் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு செய்தி திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அளவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Feb 07, 2024 03:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).