Kartik Aryan Birthday Party: நடிகர் கார்த்திக் ஆர்யனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட பிரபல நடிகைகள்: விபரம் இதோ.!
நடிகர் கார்த்திக் ஆர்யனின் பிறந்தநாளில் கீர்த்தி சானொன், பூஜா ஹெட்ஜ், ரவீனா தண்டன், ரஷாத் அதானி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
நவம்பர் 23, மும்பை (Cinema News): ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் கார்த்திக் ஆர்யன் (Kartik Aryan). மத்திய பிரதேசம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட மருத்துவ தம்பதிக்கு மகனாக பிறந்த கார்த்திக் திவாரி, பின்னாளில் கார்த்திக் ஆர்யனாக அறியப்பட்டார்.
லவ் ரஞ்சனின் நண்பன் படமான பியார் கா பஞ்ச்நாமா (2011) மூலமாக திரையுலகுக்கு அறிமுகமான ஆர்யன், ஆகாஷ் வாணி, காஞ்சி, பியார் கா பஞ்சநாமா 2, சோனு கே டிடு கி ஸ்வீட்டி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு Forbes பத்திரிகையில் தலைசிறந்த இந்திய நடிகர்களின் பட்டியலில் 100 வது நபர்களுக்குள் இவரும் ஒருவராக இருந்தார். 2011ல் தொடங்கிய திரைவாழ்க்கை, தற்போது அவரை உச்ச நடிகர்களில் ஒருவராக மாற்றி இருக்கிறது. Midday Meal Found Lizard: பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் கிடந்த பல்லி: 64 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.!
2024ல் Chandu Champion திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று கார்த்திக் ஆர்யன் 33வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
அவரின் பிறந்தால் கொண்டாட்டத்திற்கு ஹிந்தி திரையுலகின் உச்ச நடிகர்கள் மற்றும் நடிகைகளான கீர்த்தி சானொன் (Kirthi Sanon), பூஜா ஹெட்ஜ் (Pooja Hedge), ரவீனா தண்டன் (Raveena Tandon), ரஷாத் அதானி (Rashath Adani) உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
கீர்த்தி சானொன் வருகை:
பூஜா ஹெட்ஜ் வருகை:
நடிகை ரவீனா தாண்டன் வருகை:
பிறந்தநாள் விழாவுக்கு கார்த்திக் ஆர்யன் & அவரின் குடும்பத்தினர் வருகை: