HBD Ajay Devgn: ஹிந்தி திரையுலகின் தனிப்பெரும் சாம்ராஜ்ஜியம்; நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்ட அஜய் தேவ்கனின் பிறந்தநாள் இன்று.!
தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தை கொண்ட பிரபலமாக வலம்வரும் அஜய் தேவ்கனின் பிறந்தநாள் இன்று சிறப்பிக்கப்படுகிறது. பலரும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
ஏப்ரல் 02, மும்பை (Cinema News): விஷால் வீறு தேவ்கான் என்ற இயற்பெயரை கொண்ட நடிகர் அஜய் தேவகன் (Ajay Devgn), இந்திய அளவில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். ஹிந்தி (Hindi Cinema) திரையுலகில் முக்கிய நட்சத்திரமாக விளங்கிவரும் அஜய் தேவகன், 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
1991ல் அறிமுகம்: இவரின் திரை வாழ்க்கைக்கு உரிய அங்கீகாரமாக தேசிய அளவிலான திரைப்பட விருதுகளும், பத்மஸ்ரீ விருதும் கிடைக்கப்பெற்றுள்ளது. கடந்த 1991ல் பூல் அவுர் காந்த் என்ற படத்தின் வாயிலாக திரைத்துறைக்கு அறிமுகமானவர், பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார்.
வரவேற்பை பெற்றுள்ள சைத்தான் திரைப்படம்: கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழில் வெளியான கைதியை ஹிந்தியில் போலா என்ற பெயரில் இயக்கி நடித்து வெளியிட்டு வெற்றி கண்டார். அதனைத் தொடர்ந்து, 2024 தொடக்கத்திலேயே சைத்தான் (Shaitan) என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்படத்தில் மாதவன், ஜோதிகா நடித்துள்ளனர். மாதவன் வில்லனாக மிரட்டி இருக்கிறார். Women Dancer Abused: குடிபோதையில் பெண் நடன கலைஞரிடம் வம்பிழுத்த ஆசாமி; பதிலுக்கு பதில் வாக்குவாதத்தால் ரகளை.!
இளைஞர்களின் நாயகியை மணந்தவர்: இதற்குப்பின் சிங்கம் எகைன், ரைடு 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. கடந்த 1999 ஆம் ஆண்டு ஹிந்தி திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக, மொழிகளை கடந்து ரசிகர்களை பெற்ற நடிகை கஜோலை (Actress Kajol) திருமணம் செய்தவர், தற்போது தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்: இவர் கடந்த 1969 ஆம் ஆண்டு ஏப்ரல் இரண்டாம் தேதி பிறந்தார். தற்போது அவருக்கு 55 வயது ஆகிறது. இன்று அவரது பிறந்த நாளும் ஆகும். அவரது பிறந்த நாளை முன்னிட்டு திரையுலகினர் பலரும், அவரது ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நீங்களும் உங்களின் வாழ்த்துகளை கமெண்டில் சொல்லிவிட்டு போகலாமே!
To the superstar whose remarkable talent never fails to inspire. Here's wishing #BajiraoSingham aka @ajaydevgn a very happy birthday! #HappyBirthdayAjayDevgn #Singham #SinghamReturns #GolmaalAgain #Sooryavanshi #Bholaa #SinghamAgain pic.twitter.com/cKZ5NFbqu0
— Reliance Entertainment (@RelianceEnt) April 1, 2024
மெகாஸ்டார் வளர்ச்சியடைய குவியும் வாழ்த்துகள்:
Happy Birthday to the most versatile actor @ajaydevgn.
So many memories, iconic films and songs ❤️
From the evergreen 90's to the Singham, you have given us so much..
Keep Rocking MEGASTAR 🔥#HappyBirthdayAjayDevgnpic.twitter.com/65gzQSUxOL
— अपना Bollywood🎥 (@Apna_Bollywood) April 2, 2024
தர்மா ப்ரொடக்சன் நிறுவனத்தின் வாழ்த்து:
To an actor who is known for his versatile roles and blockbuster deliveries!❤️🔥
Wishing you a very happy birthday @ajaydevgn! pic.twitter.com/87M0UKJNxt
— Dharma Productions (@DharmaMovies) April 2, 2024
(The above story first appeared on LatestLY on Apr 02, 2024 11:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

