Hiphop Tamizha Adhi: இனி நான் டாக்டர் ஆதி - பி.எச்டி முடிந்து, ஆளுநர் கையில் சான்றிதழ் வாங்கிய ஹிப் ஹாப் தமிழா.. குவியும் பாராட்டுக்கள்.!
விஷால் நடிப்பில், சுந்தர் சி தயாரிப்பில் உருவான ஆம்பள திரைப்படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து சில படங்களில் மட்டுமே ஆதி நடித்தாலும், அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆகஸ்ட் 24, கோவை (Cinema News): தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தனது வாழ்க்கையில் நடந்ததை படமாக எழுதி நடித்து பிரபலமான நாயகன் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவர் திரைக்கு வரும் முன்னரே இசையால் பல இளைஞர்களின் மனதை கவர்ந்தார்.
விஷால் நடிப்பில், சுந்தர் சி தயாரிப்பில் உருவான ஆம்பள திரைப்படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து சில படங்களில் மட்டுமே ஆதி நடித்தாலும், அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழ்நாடு இளைஞர்களுடன் துணைநின்ற ஆதி, பின்னர் சில குழப்பத்தால் சர்ச்சையில் சிக்கினார். தற்போது, அவர் PhD படித்து மருத்துவ பட்டம் பெற்றுள்ளார். தனக்கான பட்டத்தை பெற அவர் கோவை பாரதியார் பல்கலை.,யில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டார். Body Pain Health Advice: உங்களின் உடலில் தினமும் இவ்வுளவு வலிகள் தெரிகிறதா?.. மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கலாம்.. உஷார்.!
அங்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் பட்டம் வாங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பேசிய அவர், வாழ்க்கையில் படிக்கும்போது கஷ்டப்பட்டாலும், வேலைபார்த்துக்கொண்டே பட்டம் பெற்றது மகிழ்ச்சியை தருகிறது.
பலதுறையை சார்ந்தவர்கள் பட்டம் படித்து வருகிறார்கள். அவர்களை போல நானும் பயின்று பட்டம் பெற்றுள்ளேன். ஆளுநர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டதால், அவர்களின் கைகளில் இருந்து பட்டத்தை பெற்றேன் என தெரிவித்தார்.
(The above story first appeared on LatestLY on Aug 24, 2023 04:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

