Black Magic Threat: செல்பி எடுக்க மறுத்த கோபிக்கு செய்வினை வைத்த பெண்மணி?.. காவல் நிலையத்தில் விஜய்டிவி பேமஸ் நடிகர் பகீர் புகார்.!

கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யச்சென்ற இடத்தில், செல்பி கேட்ட ரசிகையின் ஆசையை நிராகரித்த நடிகருக்கு செய்வினை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Black Magic Threat: செல்பி எடுக்க மறுத்த கோபிக்கு செய்வினை வைத்த பெண்மணி?.. காவல் நிலையத்தில் விஜய்டிவி பேமஸ் நடிகர் பகீர் புகார்.!
Satish Kumar alias Baakiyalakshmi Gopi (Photo Credit : Youtube)

ஜூலை 27, சென்னை (Cinema News): தமிழ் சின்னத்திரை தொடர்களில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi). இந்த நெடுந்தொடரில் கோபி (Baakiyalakshmi Gopi) என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சதிஷ் குமார். பல சின்னத்திரை தொடர்களில் இவர் நடித்து இருந்தாலும், பாக்கியலட்சுமி நல்ல அடையாளத்தை அவருக்கு பெற்றுத்தந்தது. இந்நிலையில், சதிஷ் குமார் கடந்த 2023ம் ஆண்டில் சென்னை கலாஷேத்ரா காலனியில் செயல்பட்டு வரும் அறுபடை முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அச்சமயம் அவரை நேரில் கண்ட ரசிகை ஒருவர், சதீஸுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு கேட்டுள்ளார். இதற்கு சதிஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். Tamil Amman Movies List: தெய்வீகத்தன்மையை வளர்த்த ஆன்மிக திரைப்படங்கள்; முக்கியமான அம்மன் படங்கள் லிஸ்ட் இதோ.!

செய்வினை (Seivinai) மிரட்டலால் காவல்நிலையத்தில் புகார்:

இதற்குப்பின் சதீஷின் செல்போன் எண்ணை எப்படியோ பெற்றுக்கொண்ட பெண்மணி, தொடர்ந்து அவருக்கு தொடர்புகொண்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் சதிஷ் பெண்ணின் எண்ணை பிளாக் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்மணி சதீஷின் வீட்டை தேடி கண்டறிந்து இருக்கிறார். கடந்த சில நாட்களாக சதீஷின் வீட்டிற்கு வரும் பெண்மணி, குங்குமம் தடவிய எலுமிச்சை பழத்தை வீட்டு வாசலில் வைத்து செய்வினை (Black Magic) செய்துவிடுவேன் என மிரட்டி இருக்கிறார். இதனால் பதறிப்போன கோபி, பெண்மணி குறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

(The above story first appeared on LatestLY on Jul 27, 2024 09:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).