Fire Crackers Exploded in Tiger 3 Show: டைகர் 3 படத்தில் ஆர்வக்கோளாறு ரசிகர்கள் சர்ச்சை செயல்; தியேட்டரில் பட்டாசுகளை வெடித்து அதகளம்.. ஓட்டமெடுத்த பார்வையாளர்கள்.!
சல்மான் கான், கத்ரினா கைப், இம்ரான் ஹாஷ்மி, ரேவதி, சிம்ரன் உட்பட பலரும் டைகர் 2 படத்தில் நடித்துள்ளார். இபபடம் முதல் நாளில் ரூ.40 கோடி வசூல் செய்துள்ளது.

நவம்பர் 13, மும்பை (Cinema News): மணீஷ் வர்மா (Director Maneesh Varma) இயக்கத்தில், யஷ் ராஜ் பிலிம்ஸ் (Yash Raj Films) தயாரிப்பில், ப்ரீதம் இசையில், ரூ.300 கோடி பொருட்செலவில் அட்டகாசமான ஆக்சன் காட்சிகளுடன் உருவாகியுள்ள திரைப்படம் டைகர் 3 (Tiger 3). இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் உலகளவில் நேற்று வெளியானது.
இப்படத்தில் சல்மான் கான் (Salman Khan), கத்ரினா கைப் (Katrina Kaif), இம்ரான் ஹாஷ்மி, ரேவதி, சிம்ரன், ரிதி தோக்ரா, விஷால் ஜெத்சவா, குமுந்த் மிஸ்ரா, ரன்வீர் ஷோரேவ், ஆனந்த் விதார், வரீந்தர் சிங் உட்பட பலரும் நடித்திருக்கின்றனர். ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படத்தில், சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நிலையில், சல்மான் கானின் படத்தில் டைகர் 3 படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ளார். Couple Enjoy During Menstruation Days: மாதவிடாய் நேரத்தில் உடலுறவு.. நல்லதா? கெட்டதா?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
படம் தீபாவளி 2023 பண்டிகையை முன்னிட்டு, நேற்று உலகளவில் வெளியானது. படத்தின் டிரைலர் காட்சிகள் தீப்பிடிக்க திரையை சல்மான் கான் அதிரடி கட்சிகளுடன் தெறிக்க விடுவதை உறுதி செய்திருந்தது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டம், மலேகான் (Malegaon, Maharashtra) நகரில் அமைந்துள்ள சினிமா தியேட்டரில், ரசிகர்கள் டைகர் 3 படம்பார்க்க வந்து, திரையரங்கில் பட்டாசை வெடித்து பலரையும் பதறவைத்தனர்.
வானில் வெடிக்கும் பட்டாசுகளை திரையரங்குக்குள் பற்றவைத்ததால், அது திரையரங்கின் மேல்தளத்திற்கு சென்று உயரம் கிடைக்காமல் மீண்டும் கீழே விழுந்து வெடிக்க தொடங்கியது. இதனால் பலரும் பதறியபடி தங்களின் இருக்கையில் இருந்து எழுந்து ஓட்டம் பிடித்தனர். நல்வாய்ப்பாக திரைக்கு எந்த சேதமும் ஆகவில்லை. காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.300 கோடி பொருட்செலவில் உருவான திரைப்படம், பாக்ஸ் ஆபிசில் ரூ.40 கோடி முதல் நாளில் வசூல் செய்துள்ளது.
பட்டாசுகள் வெடிக்கப்பட்ட காணொளி:
பால்கனியில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)