Jigarthanda 2: மீண்டும் மாஸ் சம்பவத்திற்கு படத்திற்கு தயாரா?.. ஜிகர்தண்டா படத்தின் 2ம் பாகம் ரிலீஸ் அறிவிப்பு.!

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜிகர்தண்டா 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெறுகிறது.

Jigarthanda 2 (Photo Credit: YouTube)

மே 15, சென்னை (Cinema News): இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த 2014ம் ஆண்டு மதுரை மாநகரை களமாக கொண்டு உருவாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் ஜிகர்தண்டா (Jigarthanda). இந்த திரைப்படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பாபி சிம்ஹா, கடந்த 2014ம் ஆண்டு தேசிய விருதையும் பெற்றிருந்தார். இந்த நிலையில், ஜிகர்தண்டா திரைப்படத்தின் 2ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. Viral Video: உனக்கு தில்லு அதிகம் தான் மாமே.. ராஜநாகத்துக்கு முத்தம் கொடுத்து சாந்தப்படுத்திய இளைஞர்..! பரபரப்பை தரும் வைரல் வீடியோ.!

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜிகர்தண்டா 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெறுகிறது. இந்த படத்தின் டீசர் யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படம் தீபாவளி 2023-க்கு தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் வெளியாகவுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement