Actor Mukesh: நடிகை பாலியல் புகார்.. மலையாள நடிகர் முகேஷ் மீண்டும் கைது..!

நடிகை அளித்த பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகர் முகேஷை காவல்துறையினர் நேற்று இரவு மீண்டும் கைது செய்தனர்.

Actor Mukesh: நடிகை பாலியல் புகார்.. மலையாள நடிகர் முகேஷ் மீண்டும் கைது..!
Actor Mukesh (Photo Credit: @TheSouthfirst X)

அக்டோபர் 22, திருவனந்தபுரம் (Cinema News): மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் முகேஷ் (Actor Mukesh). இவர், பிரபல தமிழ் நடிகை சரிதாவின் முன்னாள் கணவர் ஆவார். தற்போது, கொல்லம் தொகுதி சிபிஎம் அமைச்சராக உள்ளார். இந்நிலையில், நடிகர் முகேஷ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் (Sexual Abuse) ஈடுபட்டதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொச்சியை சேர்ந்த ஒரு நடிகை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். IIFA Awards 2024: ஐஃபா விருதுகள் 2024.. விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன்.. முழு வெற்றியாளர்கள் லிஸ்ட்.!

இதுகுறித்து, கொச்சி மரடு காவல்துறையினர் முகேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில், நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. கடந்த மாதம் நடிகர் முகேஷை மரடு காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணைக்குப் பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே ஆலுவாவை சேர்ந்த ஒரு நடிகையும் முகேஷுக்கு எதிராக ஒரு பாலியல் புகார் கொடுத்தார். கடந்த 2011-ஆம் ஆண்டு திருச்சூர் அருகே உள்ள வாழானிக்காவு என்ற இடத்தில் வைத்து நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் முகேஷ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக வடக்காஞ்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், நேற்று (அக்டோபர் 21) இரவு நடிகர் முகேஷை காவல்துறையினர் ரகசியமாக வடக்காஞ்சேரி காவல்நிலையத்திற்கு வரவழைத்து கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், விசாரணைக்குப் பிறகு நடிகர் முகேஷ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

(The above story first appeared on LatestLY on Oct 22, 2024 05:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).