ஆகஸ்ட் 20, பெரம்பூர் (Chennai News): சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் (K Armstrong), கடந்த ஜூலை 05ம் தேதி 6 பேர் கும்பலால் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இவ்விவகாரத்தில் மறைந்த ஆற்காடு ரௌடி சுரேஷ் என்பவரின் சகோதரர் பொண்ணை பாலா உட்பட 8 பேர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, அதிமுக முன்னாள் நிர்வாகி மலர்க்கொடி மற்றும் வழக்கறிஞர்கள் அருள், ஹரிஹரன், பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை, அஸ்வத்தாமன் என 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காத்திருந்து கதைமுடித்த கொடூரம்:
இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பல பரபரப்பு தகவலும் அம்பலமாகி வருகிறது. இவர்களில் கைதானவர்களில் பொற்கொடி என்ற பெண்மணி உட்பட பலர் திட்டமிட்டு, பல ஆண்டுகளாக காத்திருந்து ஆம்ஸ்ட்ராங்கின் கொலை சம்பவத்தை அரங்கேற்றயதும் தெரியவந்துள்ளது. Tamilnadu Shocker: 13 பள்ளி மாணவிகளை சீரழித்த அரசியல் கட்சி பிரமுகர்.. தமிழகமே அதிர்ச்சி.. என்.சி.சி வகுப்பு பேரில் அட்டூழியம்.!
தாய்லாந்துக்கு தப்பிச்சென்ற ரௌடி:
இந்நிலையில், கே. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரௌடி சம்போ செந்திலின் நெருங்கிய கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் என்பவருக்கும் இவ்விவகாரத்தில் தொடர்பு உள்ளது உறுதியானது. ஆனால், ரௌடி மொட்டை கிருஷ்ணன் தனது குடும்பத்துடன் தாய்லாந்து நாட்டுக்கு சென்று தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரௌடி மொட்டையின் செல்போன் அழைப்புகள் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளன.
நெல்சன் & நெல்சன் (Director Nelson Dilipkumar & Monisha) மனைவியிடம் விசாரணை:
அதன்படி, மொட்டை கிருஷ்ணன் தமிழ் திரைப்பட இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா என்பவரிடம் பேசி வந்தது உறுதியானது. இருவரும் அடிக்கடி பேசி இருக்கின்றனர். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் மோனிஷாவிடம் விசாரித்தபோது, அவர் வழக்கு ஒன்றுக்காக பேசிக்கொண்டதாக தெரிவித்து இருக்கிறார். இதனால் அவரும் சந்தேக வளையத்தில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், இவ்விவகாரத்தில் இயக்குனர் நெல்சனிடமும் விசாரிக்க திட்டமிட்டுள்ள்ள அதிகாரிகள், அவருக்கு சம்மன் வழங்கி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர்.