Actress Rita Anchan Dies: பிரபல கன்னட நடிகை ரீட்டா அஞ்சன் மரணம்.. ரசிகர்கள் சோகம்..!
கன்னட சினிமாவின் பிரபல நடிகை ரீட்டா அஞ்சன் தனது 68 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.
நவம்பர் 16, பெங்களூரு (Cinema News): கன்னட சினிமாவில் 80களின் அழகியும், 'பரசங்கட கெண்டே திம்மா' படத்தின் முன்னணி நடிகையுமான ரீட்டா அஞ்சன் (Actress Rita Anchan) தனது 68 வயதில் காலமானார். நடிகை ரீட்டா அஞ்சன் நவம்பர் 13-ஆம் தேதி அன்று உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், மருந்து உட்கொண்டதாகவும் கூறப்படுகிறது. Director Suresh Sangaiah: இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்; கல்லீரல் செயலிழப்பு, மஞ்சள் காமாலையால் சோகம்.!
மறைந்த நடிகை இந்தி, பஞ்சாபி மற்றும் குஜராத் உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். மேலும், இவர் மறைந்த நடிகர் லோங்கேஷுக்கு ஜோடியாக முக்கிய வேடங்களில் நடித்தார். அந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. தற்போது, இவரது மறைவு குறித்து பல பிரபலங்கள் இரங்கல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Nov 16, 2024 12:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

