T.J Gnanavel / Rajinikanth File Pic (Photo Credit: IMDB / Dailypioneer.com)

மார்ச் 02: பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளராக இருந்த த.செ ஞானவேல் (Director TJ Gnanavel), கடந்த 2021ம் ஆண்டு ஜெய் பீம் (Jai Bhim Movie) என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமான வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா (Actor Surya) நடித்திருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தில், காவல் அதிகாரியாக காட்சிப்படுத்தப்பட்டவரின் வீட்டு காலண்டரில், சிறை கொலை வழக்கில் சம்பந்தமே இல்லாத சமூகத்தரின் அடையாளத்தை காட்சிப்படுத்தியாக சர்ச்சை எழுந்து அவை சரி செய்யப்பட்டன.

இன்று தமிழ் திரைப்படங்களை தயாரித்து வழங்கும் லைகா ப்ரொடெக்சன்ஸ் (Lyca Productions) நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரனின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அந்நிறுவனம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) தனது 170 வது படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து லைகா ப்ரொடெக்சன்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றையும் பகிர்ந்து இருக்கிறது.

இந்த அறிவிக்கையில், "லைகா குழுமத் தலைவர் சுபாஷ்கரன் அவர்கள் பிறந்தநாளில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தலைவர் 170 திரைப்படத்தின் அறிவிப்பை அனைவருடனும் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். லைக்கா ப்ரொடெக்சன் நிறுவனத்தின் மற்றொரு பெருமைமிகுந்த தருணம் இது. தலைமுறைகள் கடந்து திரை ரசிகர்களை மகிழ்வித்து மகிழ்கின்றன சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தலைவர் 170 (Thalaivar 170) படத்தின் பணிகள் இனிதே ஆரம்பம். EVKS Elangovan Latest Speech: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி.. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பரபரப்பு பேட்டி.!

LYCA Productions Announcement | Thalaivar 170 (Photo Credit: Instagram)

இயக்குனர் தி.செ ஞானவேல் இயக்கத்தில், அனிரூத் (Anirudh) இசையில், லைகா குழுமத்தலைவர் சுபாஷ்கரன் தயாரிப்பில், லைகா ப்ரொடெக்சன் தலைமை பொறுப்பாளர் ஜி.கே.எம் தமிழ்குமரன் (GKM Tamil Kumaran) அவர்களின் தலைமையில், தலைவர் 170 திரைப்படம் 2024ம் ஆண்டு திரைக்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். சூப்பர்ஸ்டார் அவர்களின் ஒவ்வொரு திரைப்பட வெளியீடும் ரசிகர்கள் கொண்டாடும் திருவிழாதான். அவருடன் மீண்டும் இணைவதில் லைகா ப்ரொடெக்சன் பெருமிதம் கொள்கிறது. அனைவரின் வாழ்த்துகளோடு 2024ல் மாபெரும் கொண்டாட்டத்திற்கு தயாராவோம் நன்றி" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரஜினிகாந்தின் பெயரிடப்படாத 170ம் திரைப்படத்தை ஞானவேல் இயக்குவது உறுதியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் 169ம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் (Jailer) திரைப்படம் ஏப்ரல் அல்லது ஆகஸ்ட் மாதம் வெளியகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் (Sun Pictures) நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழியை சேர்ந்த சூப்பர்ஸ்டார்களும் நடிக்கின்றனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் மார்ச் 02, 2023 01:35 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).