Jawan Trailer: ஆக்சனில் நொறுக்கும் ஷாருக்கான்; புகுந்து விளையாடும் வில்லனாக விஜய் சேதுபதி.. ஜவான் திரைப்படத்தின் அட்டகாசமான ட்ரைலர் உள்ளே.!

நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில், விஜய் முக்கிய திருப்புமுனையாக படத்திற்கு அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்லீ முன்னதாக சஸ்பென்ஸ் வைத்து முடித்த தெறி படத்தின் இறுதி காட்சியோடு, இவை தொடர்பு கொண்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Jawan Trailer: ஆக்சனில் நொறுக்கும் ஷாருக்கான்; புகுந்து விளையாடும் வில்லனாக விஜய் சேதுபதி.. ஜவான் திரைப்படத்தின் அட்டகாசமான ட்ரைலர் உள்ளே.!
Jawan Trailer (Photo Credit: YouTube)

ஆகஸ்ட் 31, சென்னை (Cinema News): அட்லீ (Director Atlee) இயக்கத்தில், ஷாருக்கான் (Shah Rukh Khan), நயன்தாரா (Nayanthara), விஜய் சேதுபதி (Vijay Sethupathi), தீபிகா படுகோன் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான். நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டேர்டைன்மெண்ட் (Red Chilies Entertainment) நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. அனிரூத் (Anirudh) இசையமைத்துள்ளார்.

இந்த படம் செப்டம்பர் 10ல் திரைக்கு வரவிருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் கேட்டு ரசிகர்கள் தொந்தரவு செய்ததை தொடர்ந்து, "நான் வில்லனாக வந்து நின்றால், என் முன்பு வந்து என்ன ஹீரோவும் நிற்க முடியாது ராஜா" என்ற அட்டகாசமான வசனத்துடன் முன்னோட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தன. Lightning Like St. Elmo’s Fire: நொடிக்குள் இவ்வுளவு பலமான மின்னல் தாக்குதல்; விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ வைரல்.! 

Jawan Trailer (Photo Credit: YouTube)

இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் டைலர் இன்று படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. அட்டகாசமாக வெளியாகியிருக்கும் அந்த ட்ரைலரின் வாயிலாக நடிகர் ஷாருக்கான் காவலர், இராணுவ அதிகாரி உட்பட பல வேடத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது.

சட்டவிரோதமாக ஆயுதங்களை உலகளவில் விநியோகம் செய்து வரும் விஜய் சேதுபதியை, நாயகன் ஷாருக்கான் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. படத்தில் அனைத்தும் அதிரடி ஆக்சன் என்பதால், திரையரங்கில் ரசிகர்களின் ஆட்பறிப்புக்கு பஞ்சமும் இருக்காது.

(The above story first appeared on LatestLY on Aug 31, 2023 12:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).