Shalini Passi: "திருப்பதியில் 4 முறை என் தலைமுடியை தானம் செய்தேன்" - நடிகை ஷாலினி பாசி..!

ஷாலினி பாசி தனது தலைமுடியை பலமுறை மொட்டையடித்ததைப் பகிர்ந்து கொண்டார்.

Shalini Passi:
Shalini Passi (Photo Credit: @iNujhatkhan X)

நவம்பர் 12, டெல்லி (Cinema News): டெல்லியை சேர்ந்த பிரபல கலை நிபுணர் ஷாலினி பாசி (Shalini Passi), கடந்த 2000-ஆம் ஆண்டில் சஞ்சய் பாசியை (Sanjay Passi) திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர், இவர்கள் இருவரும் நன்கொடை அளித்து மக்களுக்கு உதவி செய்து வந்தனர். கடந்த 2021-ஆம் ஆண்டில், ஷாலினி பாசியும் அவரது கணவர் சஞ்சய் பாசியும் திருமலை திருப்பதி தேவஸ்தானங்களுக்கு ரூ.10 கோடி நன்கொடை அளித்தனர். The GOAT & Vettaiyan: பள்ளியில் திரையிடப்பட்ட தி கோட், வேட்டையன் படங்கள்; நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை.!

இந்நிலையில், ஷாலினி பாசி சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், நான் திருப்பதியில் நான்கு முறை தனது தலைமுடியை மொட்டையடித்தேன். எனக்கு முடியை விதவிதமாக ஸ்டைல் செய்வதில் ஆர்வம் இல்லை. அதனால், நான் அதை தானம் செய்வேன். மேலும், கடைசியாக 2018-ஆம் ஆண்டு தான் தனது தலைமுடியை மொட்டையடித்ததாக ஷாலினி கூறினார்.

(The above story first appeared on LatestLY on Nov 12, 2024 06:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).