Singer Liam Payne Dies: பாடகர் லியாம் பெய்ன் 3-வது மாடியில் இருந்து விழுந்து பலி..! நடந்தது என்ன..?

அர்ஜென்டினாவில் விடுதியின் மூன்றாவது மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்து பாப் இசை பாடகர் லியாம் பெய்ன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Singer Liam Payne Dies: பாடகர் லியாம் பெய்ன் 3-வது மாடியில் இருந்து விழுந்து பலி..! நடந்தது என்ன..?
Singer Liam Payne (Photo Credit: @maheshy97 X)

அக்டோபர் 17, பியூனஸ் அயர்ஸ் (Cinema News): ஒன் டைரக்‌ஷன் (One Direction) என்ற பாப் இசைக் குழுவின் மூலம் பிரபலமானவர், இங்கிலாந்தை சேர்ந்த லியாம் பெய்ன் (Singer Liam Payne). 31 வயதான இவர், கடந்த 2008 முதல் இசைத்துறையில் பயணித்து வருகிறார். பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் ஒளிபரப்பான ‘தி எக்ஸ் ஃபேக்டர்’ மூலமாக வாய்ப்பு பெற்றவர். பின்னர், தனியாக பாடல்களை பாடி வெளியிட்டார். Bigg Boss Tamil Season 8: சக போட்டியாளர்களை வெளுத்து வாங்கிய ஜெப்ரி: காரணம் என்ன? பரபரப்பு ப்ரமோ.!

தனது தோழியுடன் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் அர்ஜென்டினாவில் (Argentina) அவர் விடுமுறையை கொண்டாடினார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி, அவரது தோழி அர்ஜென்டினாவில் இருந்து சென்றுள்ளார். பின்னர், வேறொரு விடுதியில் லியாம் பெய்ன் அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கு 1டி குழு நண்பரின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று (அக்டோபர் 16) மாலை விடுதியின் லாபியில் ஆண் ஒருவர் ஆக்ரோஷத்துடன் நடந்து கொள்வதாக காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது லியாம் தான் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்த தனது அறையின் பால்கனியில் (Balcony) இருந்து கீழே விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது கொலையா? அல்லது தற்கொலையா?போதையில் தவறி விழுந்தாரா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Oct 17, 2024 05:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).