Missing Actor Return Home: வீட்டிலிருந்து வெளியேறி மாயமானது ஏன்? - தொலைக்காட்சி நடிகரின் பதில்.. ஷாக்கான அதிகாரிகள்.!

சில நாட்கள் மதப்பயணத்தை மேற்கொள்ள வீட்டில் சொல்லாமல் வெளியேறிய நடிகரால் குடும்பத்தினர் துடிதுடித்துப்போயினர். மனம் வீட்டை தேடியதும் அவர் வீடுதேடி வந்தடைந்தார்.

Missing Actor Return Home: வீட்டிலிருந்து வெளியேறி மாயமானது ஏன்? - தொலைக்காட்சி நடிகரின் பதில்.. ஷாக்கான அதிகாரிகள்.!
Guru Saran Singh (Photo Credit: @ANI X)

மே 18, புதுடெல்லி (Cinema News): 'தாரக் மேத்தா கா உல்டா சஷ்மா' (Taarak Mehta ka Ulta Chashma) என்னும் தொடரில் நடித்து பிரபலமடைந்த தொலைக்காட்சி நடிகர் குருசரண் சிங் (Guru Saran Singh). இவர் இத்தொடரில் ரோஷன் சிங் சித்தி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 22ம் தேதி இவர் டெல்லியில் இருந்து மும்பை செல்ல வேண்டி இருந்தது. ஆனால், விமானத்தில் செல்லாமல் நடிகர் திடீரென மாயமானார். அதன்பின், இரண்டு நாட்களில் அவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகிவிட, பதறிப்போன அவரின் பெற்றோர் தனது மகன் கடத்தப்பட்டு இருக்கலாம் என ஏப்ரல் 25ம் தேதி டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். Hardik Pandya Banned: ஐபிஎல் 2025ல், ஹர்திக் பாண்டியா ஒரு போட்டியில் விளையாட தடை; அடுத்தடுத்த அபராததால் நடவடிக்கை.!

மாயமான நடிகர் டெல்லி பால்ம் பகுதியில் நடந்து சென்ற காணொளி:

மதப்பயணத்தை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்த நடிகர்: இதனையடுத்து, நடிகர் மாயமான விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், நடிகர் தோள் பையுடன் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளும் கிடைக்கப்பெற்றன. இந்நிலையில், வெள்ளிக்கிழமையான நேற்று நடிகர் வீடு திரும்பினார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சரணிடம் நலம் விசாரித்தனர். காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்ட காரணத்தால், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சரண் தான் உலக வாழ்க்கையை விட்டுவிட்டு மதப்பயணத்தை சில நாட்கள் மேற்கொண்டு இருந்ததாக கூறியுள்ளார். லூதியானா, அமிர்தசரஸ் உட்பட பல நகரங்களில் இருக்கும் குருத்வராவில் தங்கி இருந்தவர், பின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு வீடு திரும்பி இருக்கிறார் என்பது உறுதியானது.

நடிகர் வீட்டிற்கு திரும்பியது உறுதி:

(The above story first appeared on LatestLY on May 18, 2024 11:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).