Thangalan Update: சியான் விக்ரமின் தங்கலான் திரைப்படத்தின் முக்கிய அப்டேட்; இன்று மாலை ரசிகர்களே தயாராகுங்கள்.!
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை திரைக்கு பல ஒடுக்குமுறைகளை மீறி கொண்டு வந்த இயக்குனர் பா. ரஞ்சித், முதல் முறையாக சியான் விக்ரமை இயக்கியுள்ளார்.
அக்டோபர் 27, சென்னை (Cinema News): பா. ரஞ்சித் (Director Ranjith) இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையில், கே.இ ஞானவேல் ராஜா ஸ்டூடியோ கிரீன் (Studio Green) நிறுவனம் தயாரித்து வழங்கும் திரைப்படம் தங்கலான் (Thangalaan).
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் (Bangalore), கோலார், கேஜிஎப் (KGF) பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படத்தின் இறுதி கட்டப் பணிகளும் முடியவுள்ளது. விரைவில் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்த நிலையில், இன்று மாலை 5 மணி அளவில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உறுதி செய்துள்ளார். Para Badminton Gold Medals: பாரா பாட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் துளசிமதி, பிரமோத் தங்கம் வென்று சாதனை..! பெண்கள் பிரிவில் வீழ்த்தப்பட்ட சீன வீராங்கனை.!
தங்கலான் திரைப்படத்தில் சியான் விக்ரம் (Chiyaan Vikram), மாளவிகா மோகனன் (Malavika Mohanan), பார்வதி திருவொத்து (Parvathy Thiruvothu), டேனியல், பசுபதி, அரிகிருஷ்ணன், ஹரி, முத்துக்குமார் உட்பட பலரும் நடிக்கின்றனர்.
கோலார் - தங்க வயல் பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கலான் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
This is going to be 🔥 pic.twitter.com/OqV2auXBhR
— G.V.Prakash Kumar (@gvprakash) October 27, 2023
(The above story first appeared on LatestLY on Oct 27, 2023 11:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

