Ajith Kumar Wax Statue: அஜித்துக்கு மெழுகு சிலை வைத்த ரசிகர்கள்.. தமிழகம் முழுவதும் கொண்டுசெல்ல தடபுடல் ஏற்பாடு.!

பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான துணிவு திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், அஜித் ரசிகர்கள் மெழுகு சிலை வைத்து கொண்டாடி வருகின்றனர்.

Ajith Kumar Wax Statue: அஜித்துக்கு மெழுகு சிலை வைத்த ரசிகர்கள்.. தமிழகம் முழுவதும் கொண்டுசெல்ல தடபுடல் ஏற்பாடு.!
Ajith Kumar Thunivu Movie Statue (Photo Credit: @TIRUNELVELIAFC)

ஜனவரி 16, அம்பத்தூர்: அல்டிமேட் சூப்பர்ஸ்டார், தல அஜித் குமார் (Ajith Kumar) நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் கடந்த ஜனவரி 11ம் தேதி பொங்கல் 2023 கொண்டாட்டங்களுக்கு இடையே திரையரங்கில் வெளியான திரைப்படம் துணிவு (Thunivu Movie).

இப்படத்தில் அஜித் குமார், மஞ்சு வாரியார், ஜான் கொகன், நயனா சாய், ஜி.எம் சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வசூல் ரீதியிலும், வரவேற்பு ரீதியிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றன. Critics Choice Awards 2023: சிறந்த வெளிநாட்டு படமாக RRR தேர்வு.. கொண்டாட்டத்தில் ராம்சரண், ராஜமௌலி ரசிகர்கள்.! 

இந்நிலையில், திருநெல்வேலி அஜித் ரசிகர் மன்றம் சார்பில், நடிகர் அஜித் குமாரின் மெழுகு சிலையானது (Ajith Kumar Wax Statue) உருவாக்கப்பட்டு சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதன்பின், அம்பத்தூரில் உள்ள ராக்கி திரையரங்கில் இன்று வைக்கப்படுகிறது.

இம்மெழுகு சிலையை தமிழகம் முழுவதும் உள்ள பல திரையரங்குகளுக்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ள அஜித் ரசிகர்கள், அம்மெழுகு சிலை அருகே நின்று புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 16, 2023 09:42 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(The above story first appeared on LatestLY on Jan 16, 2023 09:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).