ஜனவரி 2, வடபழனி: கமலா திரையரங்குக்கு (Kamala Theater, Chennai) சிறப்பு விருந்தினராக படம் பார்க்க வந்த டிடிஎப் வாசன், பதிவெண் இல்லாத காரில் வந்ததால் கார் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
எங்கும் தனது தங்கங்கள் இல்லாமல் காலடி வைப்பதில்லை என்று இருந்து வந்த டி.டி.எப் (TTF Vasan) தனியாக வந்தாலும், தங்கங்களோடு சேர்ந்து வந்தாலும் அவரை அழைத்து வருவோரை பிரச்சனையில் சிக்கவைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளாரா? பிரச்சனை சுயமாக அவரால் அவர்களுக்கு வந்து சிக்கிவிடுகிறதா? என்பது தான் மர்மத்தின் உச்சமாக இருந்து வருகிறது. இன்று நடந்த சிக்கல் செய்தியாகவே வந்துவிட்டது.
சென்னையில் உள்ள வடபழனி, கமலா திரையரங்கில் காலேஜ் ரோடு திரைப்படத்தின் சிறப்பு காட்சியானது படக்குழுவால் திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்க்க சிறப்பு விருந்தினராக டி.டி.எப் வாசனும் அழைக்கப்பட்டு இருந்தார். இன்று அவர் காலேஜ் ரோடு (Tamil Movie 'College Road') திரைப்படத்தின் சிறப்புக்காட்சியை பார்க்க நேரில் வருகை தந்திருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமலா திரையரங்கில் 20 காவல் துறையினரும் குவிக்கப்பட்டனர். Sulthanpuri Girl Death: 4 கி.மீ தூரம் தரதரவென பெண்ணை இழுத்து வந்து கொலை செய்த பாஜக பிரமுகர்.. பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வைரல்.!
இந்த நிலையில், அவர் வந்திறங்கிய மகேந்திரா நிறுவன தயாரிப்பின் வெள்ளை நிற கார் நம்பர் பிளேட் இல்லாமல் வந்துள்ளது. இதனால் அவர் வந்த காரை போக்குவரத்து காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த கார் யாருடையது? என்பது குறித்த விபரங்கள் விசாரிக்கப்பட்டது. அந்த கார் பிரவீன் என்பவருக்கு சொந்தமானது என்பது உறுதியாகவே, அவருக்கு ரூ.500 அபராதம் விதித்த காவல் துறையினர், நம்பர் பிளேட்டை பொருத்திவிட்டு வாகனத்தை பறிமுதல் செய்து செல்லுமாறு கூறி சென்றனர். வாகனம் வடபழனி காவல் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
இருசக்கர வாகனம் ஓட்டுவதில், அதை வைத்து சாகசம் செய்வதில், காணொளிகளை யூடியூபில் பதிவிடுவதில் வல்லவரான டி.டி.எப் வாசனின் மீது பல்வேறு வழக்குகள் குவிந்து வரும் நிலையில், சட்டத்தை மீறும் அவரின் செயலால் வெளிவரும் செய்தியால் தனக்கு தோன்றுவதை செய்ய தொடங்கிவிட்டார். அவ்வப்போது அரசியல் கட்சித்தலைவரை போல தங்கங்களுக்கு வீடியோ பதிவிடும் டி.டி.எப் காலடியெல்லாம் கண்ணிவெடியாக இருப்பதாக அவரின் ரசிகர்கள் சோகமடைந்துள்ளானார்.