Shreyas Talpade: என்னது நான் இறந்துவிட்டேனா? போலி செய்தியால் துடிதுடித்துப்போன பிரபல நடிகர்.. வருந்தி சோக பதிவு.!
தான் இறந்துவிட்டதாக பரவிய செய்தியால், எனது மகள் மிகுந்த மனவேதனை அடைந்தார் என நடிகர் மனம் கலங்கி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
ஆகஸ்ட் 20, மும்பை (Cinema News): ஹிந்தி மற்றும் மராத்தி திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருபவர் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே (Shreyas Talpade). கடந்த 2007ல் ஷாருக்கானின் நடிப்பில் வெளியான ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தில், ஷாருக்கானின் சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர், பின்னாளில் கோல்மால் ரிட்டன்ஸ், ஹவுஸ்புல் 2 உட்பட பல்வேறு படங்களில் நடித்து வரவேற்பு பெற்றார். Vettaiyan: ரஜினி வெறியர்களே ரெடியா?.. "இது தலைவர் தீபாவளி".. வேட்டையன் ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
வைரலான போலி செய்தி:
கடந்த 2021ம் ஆண்டு பல மொழிகளில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிய புஷ்பா படத்தின் முதல் பாகத்தில், நடிகர் அல்லு அர்ஜுனின் ஹிந்தி டப்பிங் குரலை இவரே பதிவு செய்திருந்தார். பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இதனிடையே, அவர் இறந்துவிட்டதாக நேற்று உறுதியற்ற பல செய்திகள் வெளியாகி திடீர் வைரலாகியது. இந்த தகவல் நடிகரையும் சென்றடைந்தது.
நடிகர் வேதனை:
இதனால் மிகுந்த மனவேதனையடைந்த நடிகர் ஷ்ரேயாஸ், தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "நான் உயிருடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த செய்தி தவறானது. இவை எனக்கும், எனது குடும்பத்திற்கும் மகளுக்கும் மனரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறான செயல்களை கைவிடுங்கள்" என 4 பக்க அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். மேலும், செப்டம்பர் 06ம் தேதி கங்கனா ராணவத்துடன் ஸ்ரேயாஸ் நடித்துள்ள அரசியல் திரைப்படமான எமர்ஜென்சி வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஷ்ரேயாஸின் மனம் வருந்தி பதிவு:
— Shreyas Talpade (@shreyastalpade1) August 19, 2024
(The above story first appeared on LatestLY on Aug 20, 2024 03:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

