Bigg Boss Tamil Season 8: யாருமே எதிர்பார்க்கல.. முதல் போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்தார் பேட் மேன் ரவீந்திரன்., இரண்டாவதாக சாச்சனா..!

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக ரவீந்தர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பிக் பாஸ் போட்டியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்தவர், தற்போது போட்டியாளராக அறிமுகமாகி இருக்கிறார். அவரை வரவேற்கவும், வறுத்தெடுக்கவும் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Bigg Boss Tamil Season 8: யாருமே எதிர்பார்க்கல.. முதல் போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்தார் பேட் மேன் ரவீந்திரன்., இரண்டாவதாக சாச்சனா..!
Ravindran | Sachana | Vijay Sethupathi (Photo Credit: @Chrissuccess / InstagramX)

அக்டோபர் 06, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8 Contestants), இன்று முதல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. முதல் நாளான இன்று போட்டியாளர்கள் அறிமுகம் என்பதால், ஞாயிற்றுக்கிழமை இரவு 6 மணிமுதல் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கடந்த 7 சீசன்களை நடிகர் கமல் ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்த நிலையில், விஜய் சேதுபதி இம்முறை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். போட்டியாளர்களின் விபரம் பின்வருமாறு.,

1. தயாரிப்பாளர் ரவீந்திரன் (Ravindran Chandrasekaran): பிக் பாஸ் சீசனை விமர்சித்து வந்த ரவீந்தர், முதல் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார். அவமானம் இல்லாத வருமானம் இல்லை என்பதை நோக்கி, அவர் பிக் பாஸ் வீட்டில் பயணித்து இருக்கிறார். உடல் எடை குறையாமல் அதிகரித்துக்கொண்டே சென்றதால், அதனை பெயராக பயன்படுத்தினேன்.ஜாலியான முகத்தை காண்பிக்கவே பிக் பாஸ் வந்துள்ளேன். அதற்கான வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறேன். கடந்த 5 சீசன்களை தொகுத்து வழங்கியிருக்கிறேன். Bigg Boss Season Tamil 8: விஜய குருநாத சேதுபதி-ஐ வரவேற்று மகிழ்ந்த பிக் பாஸ்; வீட்டை இரண்டாக பிளந்தது எதனால்?.. தொடங்கியது பிக் பாஸ் சீசன் 8..! 

2. சாச்சனா நவிதாஸ் (Sachana Namidass): செஸ் போட்டியில் ஆர்வம் கொண்ட சாட்சணா (21 வயது), தனது அம்ம்மாவை ராணியாக்கும் முயற்சியில் சிப்பாயாக பிக் பாஸ் இல்லத்திற்குள் வந்துள்ளார். இவர் குறும்புத்தனம் கொண்டவர் ஆவார். அம்மா ஊடகத்துறைக்குள் வர வேண்டும் என ஆசைப்பட்ட நிலையில், அவரால் இயலாததால் மகள்களை அதற்கான வழிகாட்டுதல் வழங்கி நெறிமுறைப்படுத்தி இருக்கிறார். இவர் ஆகஸ்ட் 15, மஹாராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் இல்லத்திற்குள் வந்துள்ளார். மஹாராஜா படத்தில் இவர் விஜய் சேதுபதியின் மகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் இல்லத்திற்குள் ரவீந்தர்: 

(The above story first appeared on LatestLY on Oct 06, 2024 06:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).