Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழ் சீசன் 8.. தீபாவளிக்கு என்ட்ரியாகும் வைல்ட் கார்டு போட்டியாளர் யார்?!
பிக் பாஸ் 8 வது சீசன் தொடங்கப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அக்டோபர் 29, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நடப்பு சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர்.
முக்கியப்புள்ளிகள் வெளியேற்றப்பட்டனர்:
முதல் நாளே எலிமினேஷனில் வெளியேற்றப்பட்ட சாச்சனா, மீண்டும் 4வது நாளிலேயே உள்ளே வந்தார். முதல் வார எவிக்ஷனில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து போன வாரம் தர்ஷா குப்தா வெளியேறினார். இந்நிலையில், இந்த சீசனுக்கு வரப்போகும் வைல்ட் கார்டு போட்டியாளர் (wild card contestant) பற்றிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது. Bigg Boss Tamil Season 8: "ஆறு பேரில் இரண்டு பேர் வெளியே வந்தால் இந்த நிகழ்ச்சி நன்றாக இருக்கும்" உண்மையை உடைத்த தர்ஷா குப்தா.!
வைல்ட் கார்டு என்ட்ரி:
அதன்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சந்தோஷ் பிரதாப் தான் வீட்டுக்குள் வர இருக்கிறார். அர்னவ் முன்னாள் மனைவி திவ்யாவும் என்று தகவல் வெளியாகி இருந்தது. இந்த தீபாவளிக்கு இவர் பிக் பாஸ்க்குள் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலோடு காத்துகொண்டு இருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமான ஜாலியன் சோயா, வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ள நுழைய வாய்ப்பு இருப்பதாக பலரும் தெரிவித்து வருகிறார்கள். மேலும் விஜய் டிவி புகழ் டி.எஸ்.கே, பாடகி ஸ்வாகதா, நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளே நுழையவுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
(The above story first appeared on LatestLY on Oct 29, 2024 06:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

