Ranjith Vs Ravindar Argument: ஏய் என்ன பன்றுவ நீ?.. முற்றியது மோதல்.. ரஞ்சித் Vs ரவீந்தர்.. கடும் வாக்குவாதம்.. பரபரப்பான பிக் பாஸ் வீடு.!

இரண்டு பேர் பேசிக்கொண்டு இருக்கும்போது ஏற்பட்ட வாக்குவாதம் பிக் பாஸ் இல்லத்தை பரபரப்பாகிய சம்பவம் இன்றைய ப்ரோமோ வாயிலாக அம்பலமாகியுள்ளது.

Ranjith Vs Ravindar Argument: ஏய் என்ன பன்றுவ நீ?.. முற்றியது மோதல்.. ரஞ்சித் Vs ரவீந்தர்.. கடும் வாக்குவாதம்.. பரபரப்பான பிக் பாஸ் வீடு.!
Bigg Boss Tamil Season 8 Day 3 Promo (Photo Credit: @VijayTelevision X)

அக்டோபர் 08, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நடப்பு சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர். முதல் நாளே 24 மணிநேர எலிமினேஷன் பிரிவில் சாச்சனா வெளியேற்றப்பட்டார். Bigg Boss Tamil Season 8: ஆண்கள் Vs பெண்கள்.. வீட்டை விசு படம் போல பிரித்த பிக் பாஸ்; அடித்துக்கொள்ளும் போட்டியாளர்கள்.. இன்றைய ப்ரோமோ உள்ளே.! 

ரஞ்சித் - ரவீந்தர் கடும் வாதம்:

இரண்டாவது நாளான நேற்று பிக் பாஸ் இல்லத்தின் முதல் வாரத்திற்கான தலைவராக பெண்கள் பிரிவைச் சேர்ந்த தர்ஷிகா தேர்வு செய்யப்பட்டார். மூன்றாவது நாளான இன்று போட்டியாளர்களின் ரஞ்சித் - ரவீந்தர் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெறுகிறது. இதனால் அங்கு பரபரப்பு சூழல் உண்டாக, ரஞ்சித் "நீ ஒன்றும் பிக் பாஸ் கிடையாது" என கூறுகிறார். மறுபுறம் "நான் ஒன்றும் உனது வீட்டு வேலையால் கிடையாது" எனக்கூறும் ரவீந்தர், "ஏய் என்ன செஞ்சுடுவ?" என கோபத்தில் கொந்தளிக்கிறார். இதனால் இவர்களை அமைதிப்படுத்த பிக் பாஸ் போட்டியாளர்கள் முயற்சிக்கின்றனர். அதேபோல, பாசப்பிணைப்பில் ஆண்களா? பெண்களா? என கொடுக்கப்பட்ட டாஸ்கில், ரவீந்தரின் வாதமும் கவனிக்கும் வகையில் அமைந்துள்ளது.

விஜே விஷால் (பாக்கியலட்சுமி எழில்) சக போட்டியாளருடன் வாக்குவாதம்:

ரஞ்சித் - ரவீந்தர் இடையே நடந்த காரசார வாதம்:

பாசபந்தத்தில் சிறந்தவர்கள் ஆணா? பெண்ணா?  விவாதம்: 

(The above story first appeared on LatestLY on Oct 09, 2024 03:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).