Vijay Sethupathi Roasted Sathya: சௌந்தர்யாவிடம் சர்ச்சை வாதம்; சத்யாவை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி.. வெளியேறினார் சுனிதா?.
இரண்டாவது முறையாக கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட சத்யா, சௌந்தர்யாவின் செயல்கள் குறித்து தனது எண்ணத்திற்கு ஏற்ப வாயை விட்டு வம்பில் மாட்டிக்கொண்ட நிலையில், விஜய் சேதுபதி அதனை கண்டித்தார்.
நவம்பர் 10, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. நடப்பு சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்த நிலையில், ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் எலிமினேஷன் முறையில் வெளியேற்றப்பட்டுள்ளனர். நான்காவது வாரத்தில் எந்த விதமான எவிக்சன் இல்லை. Ramesh Kanna: "எனது நண்பர்கள் எல்லாரும் தவறிவிட்டார்கள்., தனிமையில் இருக்கிறேன்" - நடிகர் ரமேஷ் கண்ணா உருக்கம்.!
ஐந்தாவது வார எலிமினேஷன் லிஸ்ட்:
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் ராயன், சிவகுமார், மஞ்சரி நாராயணன், வர்ஷினி வெங்கட், ராணவ், ரியா தியாகராஜன் ஆகியோர் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இந்த வாரத்திற்கான நாமினேஷனில் ஜாக்குலின், விஷால், ரஞ்சித், தீபக், அருண், முத்து, சாச்சனா, பவித்ரா, அன்ஷிதா, சுனிதா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். வார இறுதியான நேற்றும், இன்றும் விஜய் சேதுபதி போட்டியாளர்களின் செயல்களை பாராட்டும், கண்டித்தும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
சத்யாவுக்கு கண்டிப்பு:
இந்நிலையில், போட்டியாளர் சௌந்தர்யாவின் ஒருசில செயலை சத்யா கண்டித்து இருந்த நிலையில், சத்யாவின் செயல்பாடு பெண் போட்டியாளர்கள் மற்றும் மக்களிடையே எரிச்சல் உணர்வை ஏற்படுத்தியது. இதனால் அவரை இன்று விஜய் சேதுபதி கடுமையாக கண்டித்தார். மேலும், இன்று சுனிதா எவிக்சன் முறையில் வீட்டில் இருந்து வெளியேற்றப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் தெரியவருகிறது. எனினும், நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட பின்னரே அவை உறுதி செய்யப்படும்.
சௌந்தர்யாவின் செயல்பாடு பிடிக்கவில்லை என கண்டித்த சத்யாவை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி:
#Day35 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/HZBFJ7FSqT
— Vijay Television (@vijaytelevision) November 10, 2024
மொட்டைக் கடிதாசி குறித்து விஜய் சேதுபதி நக்கல்:
#Day35 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/b31foNO0pD
— Vijay Television (@vijaytelevision) November 10, 2024
மொட்டைக்கடிதாசி குறித்து கலாய்களும், நையாண்டிகளும்:
#Day35 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/Dj13RbuI14
— Vijay Television (@vijaytelevision) November 10, 2024
(The above story first appeared on LatestLY on Nov 10, 2024 05:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

