Bigg Boss Tamil Season 8: "அய்யோ மறுபடியும் ஸ்கூல் டாஸ்கா?" பிக் பாஸ் தமிழ் சீசனின் புதிய ப்ரோமோ.!

பிக் பாஸ் வீடு என்று ஒன்று இருந்தால் இந்த டாஸ்க் இருப்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.

Bigg Boss Tamil Season 8:
Bigg Boss Tamil Season Promo (Photo Credit: @VijayTelevison X)

நவம்பர் 12, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. நடப்பு சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்த நிலையில், ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் எலிமினேஷன் முறையில் வெளியேற்றப்பட்டுள்ளனர். நான்காவது வாரத்தில் எந்த விதமான எவிக்சன் இல்லை.

ஐந்தாவது வார எலிமினேஷன் லிஸ்ட்:

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் ராயன், சிவகுமார், மஞ்சரி நாராயணன், வர்ஷினி வெங்கட், ராணவ், ரியா தியாகராஜன் ஆகியோர் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. கடந்த வாரத்திற்கான நாமினேஷனில் ஜாக்குலின், விஷால், ரஞ்சித், தீபக், அருண், முத்து, சாச்சனா, பவித்ரா, அன்ஷிதா, சுனிதா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். அதில் சுனிதா வெளியேறினார். Bigg Boss Tamil Season 8: மஞ்சரி போடும் புதிய திட்டம்.. கொந்தளிக்கும் பெண் போட்டியாளர்கள்.. வீடியோ உள்ளே.!

இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ:

அதில் ஹவுஸ்மேட்ஸ் எல்லாம் சீருடை அணிந்து பள்ளிப் பருவத்திற்கே போய்விட்டார்கள். பிக் பாஸ் ஸ்கூலின் தலைமை ஆசிரியை வேறு யாரும் அல்ல ஒயில்டு கார்டு மூலம் வந்த வர்ஷினி தான். துணை முதல்வர் அருண் பிரசாத். மணி அடிக்கும் வேலை சிவகுமாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மஞ்சரியை ஆசிரியையாக்கிவிட்டார்கள். உங்களை பற்றி சொல்ல வேண்டும் என்றால் உங்கள் நண்பனை பற்றி சொல்லுங்கள்னு சொல்லுவாங்க என்றார் மஞ்சரி. நம்ம ஜாக்கும் ஆசிரியையாகிவிட்டார்.

இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ:

(The above story first appeared on LatestLY on Nov 12, 2024 03:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).