Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழ் சீசன் 8.. போட்டியாளர்களின் முழு லிஸ்ட் இதோ..!

பிக் பாஸ் தமிழ் 8 சீசன் போட்டியாளர்கள் யார் என்ற லிஸ்ட் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழ் சீசன் 8.. போட்டியாளர்களின் முழு லிஸ்ட் இதோ..!
Bigg Boss Tamil Season 8 (Photo Credit: @VijayTelevision X)

செப்டம்பர் 18, சென்னை (Television News): விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன் பெரிய எதிர்ப்பார்ப்பில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சி இங்கு சூப்பர் டூப்பர் ஹிட். 7வது சீசன் முடிந்த கையோடு அடுத்த சீசனிற்கும் ரசிகர்கள் தயாராகிவிட்டனர். இந்த முறை விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) அறிமுகமாகி இருக்கிறார். வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி (BB Tamil Season 8) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Jani Master's Case: டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது பாலியல் புகார்.. தெலுங்கு இயக்குனர் சங்கத்தின் பொறுப்பில் இருந்து நீக்கம்..!

போட்டியாளர்கள்: மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பட்டியல் என்று ஒன்று சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில், பாரதிகண்ணம்மா சீரியல் கதாநாயகனாக நடித்த அருண் பிரசாத், நடிகை தர்ஷா குப்தா, பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்த ஃபரீனா ஆசாத், செல்லம்மா சீரியல் நடிகை அக்ஷிதா மற்றும் நடிகர் அர்னவ், அதுபோல தொகுப்பாளராகவும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கதாநாயகனாகவும் நடித்த நடிகர் தீபக், 'குக்கு வித் கோமாளி' சுனிதா, நடிகர் வினோத் பாபு மற்றும் பவித்ரா ஜனனி, தயாரிப்பாளர் ரவீந்தர், டிடிஎப் வாசன் மற்றும் அவருடைய காதலி ஜோயா போன்ற பலருடைய பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது.

மேலும் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் சந்தோஷ் பிரதாப், சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பலருக்கும் பிரபலமான சச்சிதா, மற்றும் சமீபத்தில் சர்ச்சைகளில் சிக்கிய நடிகர் ரியாஸ் கானும் இந்த சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Sep 18, 2024 06:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).