Bigg Boss Tamil Season 8: விஜய குருநாத சேதுபதி-ஐ வரவேற்று மகிழ்ந்த பிக் பாஸ்; வீட்டை இரண்டாக பிளந்தது எதனால்?.. தொடங்கியது பிக் பாஸ் சீசன் 8..!
2 பெட்ரூம், 2 ஓய்வு அறைகள், 1 கிட்சன் என பிக் பாஸ் வீடு களைகட்டி இருக்கிறது. இதன் முதற்கட்ட காணொளிகள் அசத்தலாக இருக்கின்றன.
அக்டோபர் 06, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8, இன்று முதல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. முதல் நாளான இன்று போட்டியாளர்கள் அறிமுகம் என்பதால், ஞாயிற்றுக்கிழமை இரவு 6 மணிமுதல் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கடந்த 7 சீசன்களை நடிகர் கமல் ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்த நிலையில், விஜய் சேதுபதி இம்முறை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதனால் அவரின் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். அறிவின் பாடலுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது. Bigg Boss Tamil Season 8: "அப்பறம் என்னப்பா ஆரம்பிக்கலாமா?" - தெறிக்கவிடும் பிக் பாஸ் ப்ரோமோ காட்சிகள் உள்ளே.!
பிக் பாஸ் வீடு அமைப்பு:
இதனிடையே, நிகழ்ச்சியில் முதலாக பேசிய விஜய் சேதுபதி இயல்பான விஷயங்களை வெளிப்படுத்தி இருந்தார். பிக் பாஸ் இல்லத்தை பொறுத்தவரையில் நீச்சல் குளம் போன்ற அமைப்புகள் இல்லாமல் வீடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரகசிய அரை வெளிச்சத்துடன் அமைக்கப்பட்டு, லிவிங் ரூம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. சமையல் அறையில் ஊஞ்சல், 2 பெட்ரூமில் ஒன்று ஷேரிங், மற்றொன்று ஷேரிங் மற்றும் தனி படுக்கைகள் சேர்த்து இருக்கிறது. இரண்டு கழிவறைகளுக்கும் இடையே கண்ணாடி போல அமைப்பு உள்ளது போல் தோற்றம் உண்டாகி, மற்றொரு கழிவறைக்கு செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ரகசியம் பேச ஸ்கிரீனும் உள்ளது. ஏற்றத்தாழ்வு பாகுபாடுக்கு இங்கு வழியில்லை என்றாலும், வீடே இரண்டாக இருக்கிறது.
அறிவு பாடலுடன் தொடங்கி, வீட்டை இரண்டாக பிரித்த பிக் பாஸ்:
Visu would be proud...
GODAVARIIIIIIIIIII has kizhichified a kodu in the centre of the house.
Bring it on, #BiggBossTamil8 #BiggBossTamil #VijaySethupathi #PSBBDay0 pic.twitter.com/FyTewvwjmS
— Avinash Ramachandran (@Avinash_R13) October 6, 2024
பிக் பாஸ் வீட்டின் சில காட்சிகள்:
#BiggBossTamil8 most awaited show as started @VijaySethuOffl
Enga allum pudhusu attamum pudhusu.. godhawariii vetu Nadu la podu ma codu.. #BiggBossTamilSeason8 #VijayTV #VijaySethupathi #VijayTelevision pic.twitter.com/0c4F8G7RUG
— 🎧#ʟᴜᴄɪ፝֟ꜰᴇʀ᭄_ᴾˡᵃʸˡⁱˢᵗ🎧 (@Lucifer_viki7) October 6, 2024
அன்பு பிக் பாஸுக்காக பாடிய பாடல் உங்களுக்காக:
BB Anthem ft.Arivu 😎 | Bigg Boss Tamil Season 8 | #VJStheBBhost | Vijay Sethupathi 🔥#AalumPudhusuAattamumPudhusu @VijaySethuOffl 😍 #BiggBossTamilSeason8 #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #VijayTelevision @disneyplusHSTam #VijayTV pic.twitter.com/7T4B95iRLa
— Vijay Television (@vijaytelevision) October 6, 2024
(The above story first appeared on LatestLY on Oct 07, 2024 08:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

